Friday, May 28, 2010

எச்சரிக்கை!!!!


Michael Jackson புதிய ஈ-மெயில் வைரஸ்
மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மெயில் கூறுகிறு. அடடா, என்று ஆச்சரியப்பட்டு திறந்து பார்த்தால் அவ்வளவதுதான், கம்ப்யூட்டர் காலியாகி விடுகிறதாம்.sarah@michaeljackson.com என்ற முகவரியிலிருந்து அந்த மெயில் அனுப்பப்படுகிறது.இந்த மெயிலைத் திறந்து பார்த்தால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது, யுஎஸ்பி மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.அதேபோல மைக்கேல் ஜாக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.ஜாக்சன் ரசிகர்களே, ஜாக்கிரதை...
நன்றி,எதிரி

மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள்


எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது.

நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KODU)

இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது.

கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.

நன்றி,www.z9tech.com

மென்பொருள் தரவிறக்கம் செய்ய

உலகில் 2010ஆம் ஆண்டு சிறந்த வாழ்க்கைத் தரமுடைய நகரங்கள்!


உலகில் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வாழ்க்கைத் தரமுடைய முதனிலை நகரமாக வியன்னாவும், இரண்டாம் மூன்றாம் நிலைகளை சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுவிஸ்லாந்து சூரிச் (19), ஜெனீவா (25) மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரமுடைய பத்து நகரங்களில் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பேர்ன் சிறந்த வாழ்க்கைத் தரமுடைய நாடுகளின் வரிசையில் ஒன்பதாம் நிலை வகிக்கின்றது.உலகின் 221 நாடுகளில் சிறந்த வாழ்க்கைத்தரம் மற்றும் ஆபத்தான நகரங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உலகில் மிகவும் ஆபத்தானதாக நகரமாக ஈராக்கின் பக்தாத் நகரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி, நெருப்பு