Thursday, July 8, 2010

மனித முகத்துடன் அதிசய மீன்!

பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது.

44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது.
ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன.
இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.
Thanks To......www.z9world.com

19 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம் போன தலைமுடி!

  ஏலத்தில் அதிக பொருட்கள் மட்டுமல்ல விநோத பொருட்களும் விலைக்கு வாங்கப்படும். அந்த வகையில் நியூசிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் தலைமுடி ஒன்று 19 ஆயிரம் டொலர்களுக்கு வாங்கப்பட்டது.
அந்த தலைமுடி சாதாரண தலைமுடியல்ல. பிரஞ்சு பேரரசர் நெப்போலியனின் தலைமுடிதான் அது. நியூசிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
நெப்போலியனின் கடைசி காலத்தில் அவர் தலையிலிருந்து உதிர்ந்த தலைமுடியாக இது கருதப்படுகிறது.

கோல்டன் ஷூ யாருக்கு?

2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க ஷூவை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க ஷூவை வெல்வதற்கு 3 வீரர்களிடையே தற்போது கடும் போட்டி நிலவுகிறது.
அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா 5 கோல்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்த படியாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
அரை இறுதியில் ஸ்பெயின், ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வில்லா மற்றும் ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் கோல் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இவர்கள் அடிக்கும் கோல்களைப் பொறுத்துதான் தங்க ஷூவை தட்டிச்செல்வது யார் என்பது தெரியவரும்.
இதேபோல் உருகுவே வீரர் டீகோ போர்லான், நெதர்லாந்தின் வெஸ்லே ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர். இந்த இரு அணிகளும் அரை இறுதியில் விளையாடுகின்றன. சிறப்பாக விளையாடி அதிக கோல்களை அடிக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் தங்க ஷூ கிடைக்க வாய்ப்புள்ளது.
Thanks To.....www.lankasrisports.com