Amazing Female Contortionists video
Wednesday, June 2, 2010
அகதா சூறாவளி
அகதா சூறாவளியின் பின்னர் கெளத்தமாலாவில் தோன்றிய பாரிய துளை
மத்திய அமெரிக்க நாடுகளைத் தாக்கிய அகதா எனும் மிக மோசமான சூறாவளியினால் இதுவரை 179 பேர் பலியானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
கெளதமாலா எல்சல்வடோர், ஹொண்டுராஸ், மெக்ஸிகோ ஆகிய நாடுகளை மோசமான சூறாவளி தாக்கியது. பின்னர் பெய்த கடும் மழையால் இங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டதுடன் பாரிய மண் சரிவுகளும் ஏற்பட்டன.
மத்திய அமெரிக்க நாடுகளைத் தாக்கிய இச் சூறாவளி அகதா என அழைக்கப்படுகின்றது. மெக்ஸிகோ, எல்சல்வடோர், ஈகுவடோர் ஆகிய நாடுகளையும் அகதா சூறாவளி தாக்கியது.
சூறாவளி, மண்சரிவிகளின் பின்னர் கெளத்தமாலா நகரின் மத்தியில் பிரமாண்ட குழி ஒன்று தோன்றியுள்ளது. இதன் காரணமாக அந்த இடத்தில் இருந்த புடவைத் தொழிற்சாலையொன்றும் இடிந்து விழுந்துள்ளது. இந்த பிரமாண்ட துளை சுமார் 60 அடி ஆழத்தில் வட்டவடிவில் ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் இதனால் எந்த உயிர்ச் சேதங்கள் இல்லை என தெரிகிறது.
நன்றி,தமிழ்மீடியா
Subscribe to:
Posts (Atom)