Saturday, July 10, 2010

சூரிய சக்தியில் வானமே வசப்பட்டது.

புதிய சாதனை



சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று சரித்திரத்தில் இல்லாத வகையில் இரவு நேரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.
பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த விமானம் சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி இடைவிடாது ஒரு நாள் முழுக்கப் பறந்துள்ளது.
ராட்சத பலூனில் பறந்து உலகை வலம் வந்த முதல் நபர் என்ற பெருமைக்குரிய சுவிட்சர்லாந்தின் சாகச ஆர்வலர் பெர்த்ராண்ட் பிக்கார்த்தின் சிந்தனையில் உருவானது சோலார் இம்பல்ஸ் என்ற இந்த விமானம்.
ஒரு ஆள் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு இலகுரக விமானம் இது.
கார்பன் ஃபைபர் எனப்படும் கரி இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை என்னவோ ஒரு காருடைய எடைதான் என்றாலும், இதனுடைய இறக்கைகள் ஒரு ஜம்போ ஜெட் விமானத்தின் அளவுக்கு அறுபது மீட்டர்கள் நீளமுடையவை.
இந்த இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை உருவாக்குகின்ற சோலார் செல்கள் பன்னிரண்டாயிரம் அளவுக்கு பொருத்தப்பட்டிருந்தன.
இந்த விமானத்தில் ஒரேயொருவர் மட்டுமே செல்ல முடியும், இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர்கள்தான், இந்த விமான இயந்திரத்தின் வலு ஒரு சிறிய ஸ்கூட்டருக்கு உரியதுதான் என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தில் இதனனைக் கொண்டு உடனடியாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை எனத் தெரிகிறது.
ஆனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத சக்திகளைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு தன்னுடைய இந்த விமானம் ஒரு எட்டுத்துக்காட்டு என்று விமானத்தை உருவாக்கிய பெர்த்ராண்ட் பிக்கார்ட் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
விமானங்கள் இயங்குசக்தியைப் பெறுவதில் எதிர்காலத்தில் மாபெரும் திருப்புமுனையை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும், ஆகவே விமானங்களின் சரித்திரத்திலே ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் இது என்று கூறப்படுகிறது. 
Thanks To.....BBC

டென்னிஸ் உலக சாதனை

விம்பிள்டனில் உலக சாதனை
விம்பிள்டனில் உலக சாதனை
உலக டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டி வியாழன் மாலை விம்பிள்டனில் முடிவடைந்தது.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்நெர் பிரான்ஸின் நிக்கோலா மாஹூவை வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில் முதல் சுற்றுப் போட்டி ஒன்றிலேயே இந்த இருவருக்கும் இடையேயான இந்த போட்டி இடம்பெற்றது.
இந்தப் போட்டி 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விளையாடப்பட்டது. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்யும் ஐந்தாவது செட் நீண்டு கொண்டே போனதால் போட்டி மூன்று நாட்களுக்கு இடம்பெற்றது.
டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்துள்ள இந்தப் போட்டியில் இறுதியாக ஜான் ஐஸ்னர் 70-68 என்கிற கணக்கில் இறுதி செட்டை வென்று போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டி என்பது மட்டுமல்லாமல், ஒரு போட்டியில் மிக அதிகமாக விளையாடப்பட்ட ஆட்டம் மற்றும், மிகக் கூடுதலான அளவில் ஏஸ்கள் சர்வ் செய்யப்பட்ட போட்டி என்ற பெருமையையும் இது பெற்றது.
பத்து மணி நேரம் விளையாடிய பிறகும் இந்தப் போட்டி முடிவுக்கு வராத நிலை ஏற்பட்டது. இந்த இருவருக்கும் இடையேயான போட்டியின் இறுதி செட்டில் 59-59 என்கிற புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
விம்பிள்டன் மைதானம்
விம்பிள்டன் மைதானம்
இதற்கு முன்னர் நீண்ட நேரம் விளையாடப்பட்ட ஒரு டென்னிஸ் போட்டியானது 2004 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் போது ஃபார்ரைஸ் சண்டோரோ மற்றும் அர்ணௌட் கிளமெண்டுக்கு இடையே 6 மணி 35 நிமிடங்கள் இடம் பெற்ற ஆட்டமாகும். விம்பிள்டன் போட்டிகளை பொறுத்த வரை 1969 ஆம் ஆண்டு பான்ச்சோ கன்சால்வெஸ் மற்றும் சார்லி பஸரேல் ஆகியோரிடையே இடம் பெற்ற போட்டியே நீண்ட நேரம் ஆடப்பட்ட போட்டியாக இருந்தது.
Thanks To....BBC

கண்ணிவெடிகள் கண்டறிய புதிய தொழில்நுட்பம்

நிலக்கண்ணிவெடி
நிலக்கண்ணிவெடி
நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோலோகிரபிக் ராடார் முறை மூலம் நிலக்கண்ணிவெடிகளை மிக துல்லியமாக கண்டறிந்துவிடமுடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் படி உலகில் எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் புதைக்கப்பட்டுள்ள சுமார் 100 மில்லியன் வரையிலான நிலக்கண்ணிவெடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் முயற்சிகளில் மெட்டல் டிடெக்டர் எனப்படும் உலோகங்களை கண்டறியும் கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன.
நிலக்கண்ணிவெடிகளில் சிக்கி ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்றில் கொல்லப்படுகின்றனர் அல்லது உடல் அவயங்களை இழந்து ஊனமடைகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
உலோகங்களை கண்டறியும் கருவிகள், பொதுவாக எந்தவொரு உலோகத் துண்டுகளையும் கண்டறியக்கூடியவை என்பதால், பாதிப்புகளை ஏற்படுத்தாத உலோகத்துண்டுகளை கண்டறிவதிலேயே சுமார் 90 வீதமான வளங்களையும் நேரத்தையும் பொதுவாக அவை வீணடித்து விடுகின்றன.
ஆனால் தற்போது லேசர் கதிர்களைப் பாய்த்து பொருளொன்றின் முப்பரிமான பிம்பத்தை கண்டிறியும் ஹோலோகிரபிக் ராடார் என்ற முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக் உள்ளிட்ட எந்தவகையான பொருட்களால் ஆன நிலக்கண்ணிவெடிகளையும் மிக இலகுவாக கண்டிறிந்துவிடமுடியும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
வழமையான ராடார் கருவிகள் நிலத்தினுள்ளே கதிரை அனுப்பி அது தரும் சமிக்ஞைகளை பெறுகின்றன.
ஆனால் பத்தாயிரம் யூரோக்கள் பெறுமதியான ராஸ்கான் ரக ராடார் கருவிகள் கதிர்களை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம் நிலத்தில் புதைந்துள்ள பொருட்களின் தெளிவான நிழற்படத்தை நாம் காண வகை செய்கின்றன.
பேராசிரியர் கொலின் வின்ட்ஸர், தனது ஒய்வு நேரத்தில் சுமார் 12 வருடகாலத்தை இந்த கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் செலவிட்டு வந்துள்ளார்.
இந்தக் கருவியுடன் ஏனைய தொழிநுட்பத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியில் மனிதர் ஈடுபட தேவையில்லாத தானியங்கி முறையையும் கைக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
Thanks To..BBC

வறட்சியால் அழிந்த நகரம்

மழை பெய்யாததால் ஒரு நகரமே அழிந்து விடும் என்பதற்கு, கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் நகரம் ஓர் உதாரணமாகும். கோயில் நகரமான அங்கோர் வாட் நகரின் அழிவுக்கு பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக காரணங்கள் கூறப்படுகின்றன.
கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாகவே, அங்கோர் வாட் நகரம் அழிந்தது என சமீபத்தில் நடந்த ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்துள்ளது.
மரத்தில் காணப்படும் மர வளையங்கள், அந்த மரம் உள்ள இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் காட்டுகின்றன. அங்கோர் வாட் நகரில் உள்ள மரங்களின், மர வளையங்களை வைத்து நடத்திய ஆய்வில், மழைப்பொழிவு இல்லாததே, அங்கோர் வாட் நகரின் அழிவுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
Thanks To....Dhinamalar

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார். இவர், மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றிய போது, ஒரே நாளில் 80க்கும் அதிகமான தீர்ப்புகளை கூறி ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியான பின்பும் இந்த சாதனையை அவர் தொடர்ந்துள்ளார்.
நேற்று இவரிடம் 77 வழக்குகள் வந்தன. இதில், 75 வழக்குகளில் தீர்ப்பு கூறி, உலக சாதனை படைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. மீதமுள்ள இரண்டு வழக்குகளில் நீதிபதி பி.எஸ்.சவுகான் தீர்ப்பு கூறினார்.உலகில் வேறெந்த சுப்ரீம் கோர்ட்டும் ஒரே நாளில் 75 தீர்ப்புகளை வழங்கியதில்லை.சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அர்ஜித் பசாயத், தான் ஓய்வு பெறும் கடைசி பணி நாளில், 25 தீர்ப்புகளை கூறி சாதனை செய்தார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
Thanks To.......Dhinamalar

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் 5

Google இணைய நூலகம் 
வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதனாலோ என்னவோ, வாசிப்பு மனிதனை பரிபூரணமாக்கும் என்று கூடச் சொல்லுவார்கள். நிறைய வாசிக்கும் பழக்கமுள்ள ஆர்வலர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி கூகிள் (Google)  நிறுவனம் தொடரறா நூலகமொன்றை (Online Library) ஏற்படுத்தி யுள்ளது. இந்த நூலகத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கூட  PDF (Portable Document Format)  நிலையில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 
இருந்த போதும் பதிப்புரிமை செய்யப்பட்டு (Copyrighted Editions)  நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. கூகிள் தேடலில் எந்த விடயம் தொடர்பான புத்தகங்களையும் தேடி அவற்றை பதிவுகளை செய்து கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. 
ஆயினும் பதிப்புரிமை செய்யப்பட்ட நூல்களை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை இலவசமாக வாசிக்க முடியும்படி நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகிலுள்ள சகல புத்தகங்களையும் இலக்கமிட்டு மக்களுக்கு அவை பயன்தரக் கூடிய வகையில் நிரல்படுத்துவதே தமது தலையாய நோக்கமென கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக் குட்டி!

எகிப்தில் இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக்குட்டி ஒன்று கடந்த வாரம் பிறந்துள்ளது. இக்கன்றுக் குட்டிக்கு ஒவ்வொரு தலையிலும் இரண்டு கண்கள், வாய் போன்ற உறுப்புகள் முழுமையாகவே உண்டு. தலைகளின் பாரம் காரணமாக கன்றுக்குட்டி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை.
ஆயினும் இது ஆரோக்கியமாகவே உள்ளது. இதற்கு புட்டியில் பால் பருக்கப்படுகின்றது. கன்றுக் குட்டியின் உரிமையாளரான விவசாயி இது ஒரு தெய்வ அதிசயம் என்று வர்ணிக்கின்றார்.

உலகின் முதல் முழு முகமாற்று சிகிச்சை

இயற்கையின் படைப்பினை மனிதன் மாற்றுவதில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறான். மாற்றமுடியாத எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே புதிது புதிதாக பல மாற்றங்களை உருவாக்கி வருகிறான் மனிதன்.
அண்மையில் பிரான்ஸில் ஓர் அரிய மாற்றமொன்றை மருத்துவர் ஒருவர் செய்திருக்கிறார். ஜெரோம் என்ற 35 வயதுடைய நபருக்கு மரபணுக் கோளாறினால் முகம் விகாரமாகக் காணப்பட்டது. இதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்த ஜெரோம், டொக்டர் லோரன்ட் லான்டியரி (Laurent Lantieri) என்பவரை அணுகி தனது முகத்திற்கு சிகிச்சையளிக்குமாறு வேண்டினார்.
அவரது வேண்டுகோளை சவாலாக எடுத்துக்கொண்ட மருத்துவர் தனது மருத்துவ குழுவுடன் சத்திர சிகிச்சைக்குத் தயாரானார். இறந்துபோன ஒருவரது முகத்தினை எடுத்து பாதிக்கப்பட்டவரின் முகத்திற்கு ஏற்றவிதத்தில் பிளாஸ்டிச் சிகிச்சை செய்திருக்கிறார்.
மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட முகமாற்று சிகிச்சை என்ற பெருமையையும் தட்டிச் சென்றிருக்கிறது. விகாரமான முகத்தினைக் கொண்டிருந்த ஜெரோம் இப்பொழுது புன்சிரிப்போடு காணப்படுகிறார்.
Thanks To....Ilakkiya

அனைத்துலக வானியல் ஆண்டு

அனைத்துலக வானியல் ஆண்டாக 2009 அறிவிக்கப்பட்டுள்ளது. இது கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியைப் பயன்படுத்தி முக்கிய வானியல் அவதானிப்புகளை செய்த 400 ஆண்டுகள் நிறைவில் வருகிறது. இந்த அறிவிப்பை பல நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் வெளியிட்டது. சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார்.
"சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது. மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும்.
அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது. ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படியொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார்.
மருத்துவப் படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தைப் படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவைச் சாரும்.
 Thanks To......TamilCNN

வேண்டாம் விபரீதம்!

நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? : வேண்டாம் விபரீதம்!
நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? ஒரு நாளைக்கு சராசரியாக 100 முறைக்கு மேல், விரல்களால், ‘டைப்’ அடித்து எஸ்.எம்.எஸ்., அனுப்புபவரா?
அப்படியானால், முதலில் விழிச்சுக்குங்க… வேண்டாம் விபரீதம்! இதே எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ்., செய்த அமெரிக்க பள்ளிச் சிறுமி, ஆனீஸ் லெவிட்சுக்கு மணிக்கட்டு மரத்துப்போய், கடைசியில், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கையில் பிடிக்கவே முடியாமல் போய் விட்டது.
உங்களுக்கு மட்டுமல்ல, இப்படி 100, ‘கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவோருக்கும், எஸ்.எம்.எஸ்., பார்ப்போருக்கும் கோளாறு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மருத்துவ ரீதியாக வாய்ப்பு உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
இந்த பாதிப்புக்கு, ‘கார்பல் டன்னல் சின்ட்ரோம்’ என்று பெயர். கம்ப்யூட்டரில், கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி வேலை செய்வோருக்கும், அதிகமாக, ‘மவுஸ்’ பிடித்து வேலை செய்வோருக்கும் இந்த கோளாறு வரும்.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்பவராக இருந்தால், இந்த அனுபவம் புரியும். எப்போதும் கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி, ‘டைப்’ செய்தும், ‘மவுஸ்’ பிடித்தும் கொண்டிருந்தால், கை விரல்களில் உள்ள நரம்புகள் பாதிக்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
முழங்கையில் இருந்து கை விரல்களில் நடுப்பகுதியில் ஒரு நரம்பு போகும். அதாவது, சாலையின் நடுவே எப்படி தடுப்பு போடப்பட்டுள்ளதோ, அப்படி இந்த நரம்பு போகும்.
அடிக்கடி கம்ப்யூட்டர், ‘மவுஸ்’ பிடிப்பதால், மொபைல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதால் இந்த நரம்பு பலவீனம் அடையும். ரத்த ஓட்டம் பாதித்து, திடீரென மரத்துப் போகும். இதனால், கை விரல்களில் உணர்ச்சியே இருக்காது; அப்புறம், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கை விரல்களால் பிடிக்கவே முடியாமல் போய் விடும்.
இதற்கு தீர்வு என்ன? அறுவை சிகிச்சை ஒன்று தான். அறுவை சிகிச்சை செய்த பின், மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டால், இந்த பிரச்னைகள் எல்லாம் வராது. மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் வரம்பு மீறும் போது, கை விரல்களில் ஒரு வித நமைச்சல் ஏற்படும். உள்ளங்கை அரிக்கும்; போகப் போக ஒரு வித தடிப்பு உணர்வு ஏற்படும். கடைசியில் உணர்ச்சியே இல்லாமல் போய் விடும். கை விரல்கள் ஏதோ சம்பந்தம் இல்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை போல, எதற்கும் பயன்படாமல் போய்விடும்.
எஸ்.எம்.எஸ்., மூலம் கைவிரல் மரத்துப் போய், அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆனீஸ் லெவிட்ஸ் தன் அனுபவத்தை கூறுகிறார்:
எனக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., தருவது என்றால் மிகவும் பிடிக்கும். என் தோழிகள் எல்லாரும் தகவல் பரிமாறுவதே அதில் தான். போனில் பேசாமல், இப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
நான் ஒரு நாளைக்கு 100,’கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்ப, விரல்களால், ‘டைப்’ செய்வேன். அப்படி செய்த நான், ஒரு நாள், காலை எழுந்ததும் கைவிரல்களில் ஒருவித நமைச்சல் காணப்பட்டது. போகப் போக, விரல்களில் உணர்ச்சியே இல்லாமல் போய் விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டபோது, விரல்களில் சூடு பட்டும், எதுவும் உணர்வே தெரியவில்லை. டாக்டரிடம் காட்டியதற்கு, உடனே அறுவை சிகிச்சை செய்து, கை விரல் நரம்பில் உணர்ச்சியூட்ட முடியும் என்று கூறினார்.
அறுவை சிகிச்சை செய்த பிறகு தான், என்னால், மொபைல் போனை கைவிரல்களால் பிடிக்க முடிகிறது.
— இவ்வாறு கூறிய ஆனீசிடம், ‘இப்போது எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடிகிறதா?’ என்று கேட்டது தான் தாமதம், ‘எஸ்.எம்.எஸ்.,சா… அதை மறந்து ரொம்ப நாளாச்சு; எதுவாக இருந்தாலும், தோழிகளிடம் போனில் சில நொடிகள் பேசுவேன்…’ என்று, ‘பளீச்’சென சொன்னார்.
என்ன… நீங்க எஸ்.எம்.எஸ்., விரும்பியா? அப்படீன்னா, எச்சரிக்கையாக இருங்க!
Thanks To......www.z9tech.com

உலகில் 2010ஆம் ஆண்டு சிறந்த வாழ்க்கைத் தரமுடைய நகரங்கள்


  உலகில் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வாழ்க்கைத் தரமுடைய முதனிலை நகரமாக வியன்னாவும், இரண்டாம் மூன்றாம் நிலைகளை சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ்லாந்து சூரிச் (19), ஜெனீவா (25) மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரமுடைய பத்து நகரங்களில் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைநகர் பேர்ன் சிறந்த வாழ்க்கைத் தரமுடைய நாடுகளின் வரிசையில் ஒன்பதாம் நிலை வகிக்கின்றது.
உலகின் 221 நாடுகளில் சிறந்த வாழ்க்கைத்தரம் மற்றும் ஆபத்தான நகரங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உலகில் மிகவும் ஆபத்தானதாக நகரமாக ஈராக்கின் பக்தாத் நகரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறுவை ‌சி‌கி‌ச்சை‌‌யி‌‌ல் ரோபோ ‌சில‌ந்‌தி

சவாலான அறுவை ‌சி‌கி‌ச்சைக‌ளி‌ல் பய‌ன்படு‌‌ம் புதுமையான நானோ ரோபோ த‌ற்போது வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. ‌சில‌ந்‌தி வடி‌வி‌ல் இ‌ந்த ரோபோ உ‌ள்ளது.
ம‌னித‌னி‌ன் தலைமுடி தடிமனை ‌விட ஒரு ல‌ட்ச‌ம் மட‌ங்கு ‌சி‌றியது இ‌ந்த ரோபோ ‌சில‌ந்‌தியாகு‌ம்.
கொல‌ம்‌பியா ப‌ல்கலை‌க்கழக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ‌சில‌ந்‌தி ரோபோவை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர். உட‌லி‌ன் ஒ‌வ்வொரு செ‌ல்‌லிலு‌ம் இர‌ட்டை‌ச் சுரு‌ள் ஏ‌ணி வடிவ‌ம் கொ‌ண்ட ஆ‌ர்.எ‌ன்.ஏ. மூல‌க்கூறுக‌ள் இரு‌க்‌கிறது.
நோ‌ய் ஏ‌ற்படு‌ம் போது ஆ‌ர்.எ‌ன்.ஏ.‌க்க‌ளி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌ம். இ‌ந்த நானோ ரோபோவா‌னது ஆ‌ர்,எ‌ன்,ஏ.‌வி‌ன் ஏ‌ணி‌ச் சுரு‌ளி‌ல் இணை‌க்க‌ப்ப‌ட்டு அனு‌ப்பு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
நோயா‌‌ல் ‌‌பிளவுபடு‌ம் டி.எ‌ன்.ஏ. ஏ‌ணி‌ச்சுரு‌ளி‌ல் இணை‌ப்பு ஏ‌ற்படு‌த்து‌ம் வேலையை இ‌ந்த ரோபோ செ‌ய்யு‌ம். ஆனா‌ல் இ‌ந்த ரோபோவா‌ல் ஏ‌ணி‌ச் சுருளை து‌ண்டு செ‌ய்ய முடியாது. அதே நேர‌த்‌தி‌ல் நோ‌ய்‌த் தொ‌ற்று செ‌ல்களை அ‌ழி‌க்க இதை‌ப் பய‌ன்படு‌த்த முடியு‌ம்.
Thanks To.... www.z9tech.com

உயிருக்கே கேடு விளைவிக்கும் செல்போன் டவர்!

நகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.
ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர்.
செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார்.
இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.
Thanks To.....Virakesary