Friday, August 5, 2011

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க...!

1.தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(படைத்தவன் மட்டும் தான் பெரியவன் என்று நினையுங்கள்.)
2.அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை தவிருங்கள்.
3.எந்த விஷயத்தையும் பிரச்சினையயும் நாசுக்காகக் கையாளுங்கள்.
4.சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5.நீங்கள் சொன்னதே சரிசெய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
6.குறுகிய மனப்பான்மையை விட்டொழிங்கள்.
7.உண்மை எதுபொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் வ்ட்டுவிடுங்கள்.
8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
9.அளவுக்கதிமாக தேவைக்கதியமாய் ஆசைப்படாதீர்கள்.
10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
11.கேள்விப்படுகிற எல்லா விஷ்யங்களையும் நம்பி விடாதீர்கள்.
12.அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
13.உங்கள் கருத்துக்களில் உலக விஷயத்தில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மார்க்க விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்யாதீர்கள்.
14.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
15.மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
16.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
17.பேச்சிலும் நடத்தையிலும் திமிர்த்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கைக் காட்டுவதை தவித்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
18.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.
19.பிணக்கு ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
20.தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை,அதற்காக ஓவர் பில்டப் கொடுத்து பொய்யாக எதையாவது சொல்லி வைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு தலைவலியாகவும் அல்லது வெற்றியாகவும் அமையலாம்.