உலகின் மிகச் சிறிய படையணியாக Swiss Guard திகழ்கிறது. இப்படையணி உலகின் மிகச் சிறிய நகரான வத்திக்கானில் பாப்பரசரின் பாதுகாப்புக்காக இயங்குவதுடன், ஜனவரி 22, 1506 ல் உருவாக்கப்பட்ட இப்படையணி, கடந்த 2006 ல் தனது 500 வது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.
110 அங்கத்தவர்களை மட்டுமே கொண்ட இப்படையணிக்கு 5 அடி 9 அங்குலம் உயரமுடைய கத்தோலிக்க மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.