Wednesday, November 17, 2010

முகமில்லாத மனிதன்.


போர்த்துக்கல்,லிஷ்பனை (Lisbon) ச்சேர்ந்த Jose Mestre என்பவரது முகத்தில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக வளரும் அதீத சதையினால் அவர் தனது முகத்தை இழந்துள்ளார்.
 இவரின் முகத்திலுள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்து முதன் முதலில் தோலில் சிவப்பு நிறமான பகுதி உருவானது.
அவருக்கு 14 வயதாக இருக்கும் போது வளர ஆரம்பித்த இந்த அதீத சதை தற்போது 33Cm நீளத்தில் 3Kg எடையில் வளர்ந்து, அவரது உதடு,மூக்கு,ஒரு கண் என்பவற்றையும் மறைத்து விட்டது. அவரது சகோதரி Guida  தான் உதவியாகவுள்ளார்.
இவர் தொடர்பாக Discovery தொலைகாட்சி அலைவரிசை 'My Shocking Story' நிகழ்ச்சித்தொடரில்  'The Man With No Face' எனத்தலைப்பிட்டு விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.












ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் 'modern messaging system'

பல நாள் கேள்விக்கு விடை கிடைத்திவிட்டது. ஃபேஸ்புக் இணைய தளம் புதிதாக அறிவித்திருக்கும் சேவையினை “modern messaging system” என அழைக்கிறது. இது மின்னஞ்ஞல் அல்ல. மின்னஞ்ஞல் எனும் வரைவிலக்கணத்துக்கு அப்பால் பட்டது. மின்னஞ்ஞல் சேவையும் இதில் உள்ளடங்கும்.
ஃபேஸ்புக் இணைய தளம் ஒரு புதிய மின்னஞ்ஞல் சேவையினை அறிமுகப்படுத்தப் போகிறது என உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில் , அது மின்னஞ்ஞல் அல்ல அதைவிட ஒரு படி மேலான தொடர்பாடல் முறையொன்று என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த “modern messaging system” மூன்று வகையான எண்ணக்கருக்களை கொண்டுள்ளது.
01. seamless messaging
02. cross-platform conversation history
03. the social inbox.
நீங்கள் விரும்பும் சமயத்தில் உங்களுக்கு @face book.com எனும் மின்னஞ்ஞல் முகவரி உங்களுக்கு தரப்படும். இங்கு சம்பிரதாயமான மின்னஞ்ஞல் முறை காணப்படாது. யாருடன் வேண்டுமானாலும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த மெசேஜின் முறைமை அமைய இருக்கிறது. மேலும் எமக்கு வரும் தகவல் அனுப்பப்படும் நபரினை பொறுத்து ஒரு சிறப்பான வகைப்படுத்தலும் இங்கு இடம்பெற இருக்கிறது.
சுருக்கமா சொன்னா, ஒரு கூலான தொடர்பாடல் முறையாக இந்தப் புதிய Messaging system அமையவிருக்கின்றது. இந்தப் புதிய சேவையானது இன்னும் சில மாதங்களில் பாவனைக்கு வர காத்திருக்கிறது. பரீட்சாத்தமாக கேட்பவர்க்கு மட்டுமே ஃபேஸ்புக் இந்த புதிய சேவையை தர இருக்கிறது. அதாவது இன்விடேசன் முறைமை.
Thanks To.....www.z9tech.com