உடல் ஆரோக்கியத்தில் இல்லை, வாழ்வாதாரம் தான் பிரச்னை.
ஏழ்மை காரணமாக கவனிக்க முடியாது என்று ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களால் இவர்களை
யார் பராமரிப்பது என மருத்துவமனை வட்டாரமும், அரசும் குழம்பிபோய் இருக்கின்றனர். இந்த குழப்பம்
ஒரு புறம் இருந்தாலும் இருவரும் நான் டாக்டராக வேண்டும் என்றும், நான் இன்ஞ்சினியர் ஆக
வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை கூறி நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் இந்த
இரட்டை குழந்தைக்கு இந்த சமூகம் என்ன செய்ய போகிறது ? ஆந்திர மாநிலத்தில் வாரங்கல்
மாவட்டத்தில் பீருசெட்டிங்டம் என்ற கிராமத்தில் வசித்து வரும் முரளி -
நாகலட்சுமி தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகள் வீணா- வாணி. பிறவியில் இரண்டு
தலைகளும் ஒன்றி பிறந்ததால் இவர்களை பிரிக்கும் முயற்சி விபரீதமானது என
டாக்டர்கள் இதில் இறங்கவில்லை. இருப்பினும் இருவரையும்
ஐதராபாத்தில் உள்ள
குழந்தைகள் சிறப்பு அரசு நிலோபர் மருத்துவமனை பராமரித்து வருகிறது. தற்போது 8 ஆண்டு வயதை தொட்டுள்ள இந்த
பெண்மணிகள் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மூலையில் முடங்கி கிடக்கின்றனர். ஆனால்
நாங்களும் சமுதாயத்தில் ஒரு ஆளாக வாழ வேண்டும் என்று நம்பிக்கையுடன் வாழும்
இவர்கள் எண்ண ஓட்டத்தில் எந்தவொரு குறைபாடும் இல்லை. ஆனால் இவர்களை இன்னும்
ஆஸ்பத்திரியில் பராமரிப்பது சாத்தியமில்லை என்ற காரணத்தினால்
பெற்றோர்களைவரவழைத்து என்ன செய்யலாம் என யோசனை கேட்டனர்.
நாங்களே கஷ்டப்படுகிறோம்: இருவரையும் ஆபரேஷன் மூலம் பிரித்து கொடுங்கள் என்னவானாலும் பரவாயில்லை என கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோம் . ஆனால் இதில் மருத்துவமனை ஏன் அக்கறை காட்டவில்லை ? நாங்கேள இன்னும் வீட்டில் 2 குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறோம். இந்த
குழந்தைகளை பராமரிக்கவும், செலவு செய்யவும் எங்களிடம் எந்தவொரு வழியும் இல்லை. அரசு தரப்பில் ஏதாவது ஒரு வேலையாவது கொடுத்தால் நாங்கள் அதனை வைத்து சமாளித்து விடுவோம் . நாங்கள் குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது என்று பெற்றோர்கள் கைவிரித்து விட்டனர். இந்த பெற்றொர்கள் கடந்த ஒன்றரை வருடமாக வீணாவையும், வாணியையும் வந்து பார்க்கவில்லை என்பது ஒரு விஷயம்.

இது குறித்து மருத்துவமனை
கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கூறுகையில்: தற்போது வளர்ந்து இருக்கும்இந்த
குழந்தைகளை இன்னும் அரசு ஆஸ்பத்திரியில் பராமரிக்க முடியாது. இவர்கள் தொடர்ந்து
இங்கு இருந்தால் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் பாதிக்கும். எந்த நேரமும், டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் என பார்த்து
அவர்களது மனம் சிரமப்பட்டிருக்கும். தற்போது மாற்று இடம் தேவை. குழந்தைகள்
மையத்தில் சேர்த்து இவர்களுக்கு தேவையான வழிகளை செய்ய வேண்டும் என்றார்.