மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Thanks To......www.z9tech.comதரவிறக்கம் செய்ய
மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செல்போனாக மட்டுமல்லாமல், ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.
இந்த பிளாக்பெர்ரி செல்போனின் பெயர் eUNO R10. வோடபோன் சேவையில் இந்த அதி நவீன வசதி இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில், கையடக்கமான, ஈசிஜி கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக் கொண்டு ஈசிஜி பார்க்கலாம். பின்னர் இதன் முடிவுகளை வயர்லைன் ஏஅல்லது ஜிஎஸ்எம் செல்போன் மூலம் நமது டாக்டருக்கு அனுப்பி வைத்து அவருடையை ஆலோசனையைப் பெற முடியும்.
அதாவது எந்த லேபுக்கும்,டாக்டரிடமும், மருத்துவமனைக்கும் செல்லாமல் நாமே ஈசிஜி பார்த்து ஆலோசனையை டாக்டரிடம் செல்போன் மூலமே பெற முடியும்.
இருப்பினும் பிளாக்பெர்ரி செல்போன்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். அதாவது நாம் எடுக்கும் அந்த ஈசிஜி அறிக்கை பிளாக்பெர்ரியின் சர்வருக்குப் போய் அங்கிருந்து டாக்டர் வைத்துள்ள பிளாக்பெர்ரிக்குப் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன வசதி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வோடபோன், பிளாக்பெர்ரி சேவைகளைக் கொண்டோர் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும்.
Thanks To.....Vaavimakal