ஆப்பிள்
நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் செல்போன்
பிரபலமடைந்துள்ளது.
தங்கள்
தயாரிப்பை பிரபலப்படுத்த சாம்சங் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் மேற்கொண்ட
முயற்சியே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனில் உள்ள
பாட்டரி குறைபாடு, இணையதளத்தை இணைப்பதில் உள்ள வேகம் ஆகியவையும்
கேலக்ஸியின் பக்கம் வாடிக்கையாளர்களைத் திருப்பியுள்ளது. அமெரிக்க இளைஞர்களிடையே
நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் இந்தியாவுக்கு
ஜனவரியில்தான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.40 ஆயிரம் வரை இருக்கும். கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த
4-ம் தலைமுறை செல்போனை சாம்சங் தயாரித்துள்ளது.