Sunday, August 15, 2010

உலகின் இளவயது பணக்காரர்

Bill Gates (53 ), Warren Buffet (78 ) ஆகிய உலகின் பெரும் பணக்காரர்கள்  வரிசையில், உலகின் இளவயது பணக்காராக Mark Elliot Zuckerberg ம் இணைந்து கொள்கின்றார்.
இவர் யார்?
New York ல் பிறந்த இவர், பிற பல சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைவரும், நிறைவேற்றுப் பணிப்பாளருமாவார். கடந்த 2010 மே 14  ல் தனது 26 வயதினைப் பூர்த்தி செய்த இவர்,   2004   ல் Harvard  பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற காலங்களில் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்கினார். ஆரம்ப காலங்களில் தான் படித்த பல்கலைக்கழகத்துடன்  மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இவ்வலையமைப்பானது, குறுகிய காலப்பகுதியில்  விரிவடைந்து, இன்று உலகம் பூராவும் 350 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நாத்திகரான  இவரது சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.