Sunday, March 20, 2011

யார் இந்த அம்னா ஃபாரூக்கி?

28 வயதுடைய நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை ஆபாச நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை படித்த பிறகு அதில் ஈர்க்கப்பட்டு, இதுநாள் வரை தான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து நடிப்பதையும்,மாடல் செய்வதையும்,மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடுவதையும் விட்டுவிடார். இஸ்லாத்தை ஏற்ற அவர் இப்போது உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா அணிந்து  வெளியே வருகிறார்.
புத்த மதத்தைச் சேர்ந்த, மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற  அப்பெண்மனி தனது கடந்த கால வாழ்வு பற்றி..... நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன். தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன். இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. நான் இப்பொழுது ஆபாசம், மது, புகை, அசுத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டுவிட்டேன். இஸ்லாத்தை பற்றி உலகம் கூறுவது அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன். என்று சொல்கிறார். 
இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பின் தன் பெயரை இப்போது அம்னா ஃபாரூக்கி என மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய நெறிமுறைகளை பின் பற்றி வாழும் அவரின் கடந்த காலங்களில் புகைத்தல், மது அருந்தியது, ஆபாசமாக நடித்த காட்சிகளை   ஒளிபரப்பி வேதனை உண்டு பண்ணி வருகின்றனர்.  
அத்துடன் அந்த பொண்ணுக்கு இப்போது  முஸ்லீம்கள் மீது ஆசை வந்து விட்டதனால், முஸ்லீமாக மாறி விட்டதாகவும் எழுதி வருகின்றனர்.
ஒருவர் பெயரளவில் இல்லாமல், இஸ்லாத்தை உண்மையாக ஆராய்ந்து நேசித்தால் அவரிடம் அல்லாஹ் பெரும் மாற்றத்தை கொண்டு வருவான் என்பதை இப்பெண்மணி மூலாமாக மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இவரது  நேர்காணலை இங்கே பார்க்கவும்............
http://anadvi.blogspot.com/2010/11/islam-is-very-great-religion-pooja-lama.html

17 வயது 22 அங்குல உயரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் நோர்டே மாநிலத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்த  17 வயதுடைய டைனி ஜன்ரி பாலாவிங் (Tiny Junrey Balawing) என்பவரின் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே.  இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளதுடன்,கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெறவுள்ளார்.
ஜுன் மாதம் 12ம் திகதி  18 வயதை அடையும் போது இந்தப் பெருமையை இவர் தனதாக்கி கொள்ளவுள்ளார்.
தற்போது உலகின் குள்ளமான மனிதரான  நேபாளத்தின் கஜேந்திர தாபா மாகாவை (உயரம் 26.4 அங்குலம்) விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.
தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.
நடக்கவும் நிற்கவும் சிரமப்படும் இவர்  தனது வருங்கால புகழை எண்ணி மகிழ்ச்சியடையும்  இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். ஆனால் சகோதரர்கள் மூவரும் நல்ல உயரமானவர்கள்.
13,11 மற்றும் 6 வயதான இவரின் இளைய சகோதரர்கள் பாடசாலை செல்லும் போது இவர் மட்டும் தாயுடன் வீட்டிலேயே இருந்து விடுகின்றார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவரைப் பெற்றோர் இடுப்பில் தூக்கியே சுமக்கின்றனர்.





மனித உடம்பு எனும் அதிசயம் - 3

  1.  மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.
  2. மனித மூளையில் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
  3. மனிதன் இறந்து மூன்று நிமிடம் கழிக்கும் வரை மூளையின்  இரத்த ஓட்டம் இருக்கும்.
  4. மனித மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை 1400.
  5. மனித முதுகுத்தண்டின் எலும்புகள் 33.
  6. மனித மூளையின் நிறை 1.4 Kg.
  7. உடலின் சாதாரண வெப்பநிலை 98.4' C ஆகும்.
  8. சராசரி மனித உடலிலுள்ள இரத்தத்தின் அளவு 5.5 லீற்றர்களாகும்.
  9. உடலின் மெல்லிய சருமம் கண் இமையாகும்.
  10. மனித உடலிலுள்ள குரோசோம்களின் எண்ணிக்கை 23 ஜோடிகளாகும்.
  11. ஒரு மனிதனின் உடலிலிருந்து கிடைக்கும் கொழுப்பிலிருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
  12. மனிதனின் கண் நிமிடத்துக்கு 25 முறை மூடித்திறக்கிறது.
  13. நாம் ஒரு வார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
  14. மனித நாக்கின் நீளம் 10 Cm ஆகும்.
  15. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீற்றர்களாகும்.
  16. மனித உடலில் கெட்டியான பகுதி பற்களின் இனாமல் ஆகும்.
  17. நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
  18. நாம் வாழ்நாளில் சராசரி சாப்பிடும்  உணவின் மொத்த  அளவு 30,000 Kg ஆகும்.
  19. நம் உடலில் இரத்த சுற்றோட்டம் ஒரு முறை நிகழ 64 வினாடிகள் ஆகின்றன.
  20. நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லீற்றர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது.