Thursday, October 7, 2010

2015 ல் BMW

IED (Instituto Europeo di Design) மாணவர்களும் BMW வாகன உற்பத்தி நிறுவனமும் இணைந்து எதிர்வரும் 2015 ம் ஆண்டுக்கென புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி புது வகை  கண் கவர் கார்களை வடிவமைத்துள்ளனர்.


55 வயது உலக சாதனை மனிதக்குரங்கு.

அமெரிக்காவின் ஒஹியோ கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் 22 டிசம்பர் 1956ல் பிறந்து, 55 வருடங்கள் வாழ்ந்து அண்மையில் டெக்ஸாஸ் டல்லாஸ் மிருகக்காட்சி சாலையில், வயிற்றில் ஏற்பட்ட கட்டி ஒன்றின் காரணமாக இறந்து போன மனிதக்குரங்கு தான் உலகின் அதி வயது (55) கூடிய மனிதக்குரங்காக உலக சாதனைப்புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

' பேஸ்புக்' வழங்கும் புதிய 'குரூப்ஸ்'

பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவரும் அதிக அக்கறை கொள்ளும் விடயம் ' ப்ரைவசி' ஆகும். நாம் பொதுவாக விடயங்களை, தகவல்களை அல்லது புகைப்படத்தினை நமது பேஸ்புக் நண்பர்களிடையே பகிர்கின்றோம்.
எனினும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளைக் குறித்த சிலரிடையே மட்டும் பகிர விரும்புவதுண்டு. இவ் விடயத்தினை கருத்திற் கொண்டு புதிய ' குரூப்ஸ் ' வசதியினை பேஸ்புக் வழங்கியுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக்கில் இது போன்றதொரு வசதி உள்ள போதிலும் 5 % குறைவான பாவனையாளர்களே இதனை உபயோகிப்பதாகவும் ஆனால் இவ்வசதியானது பல பாவனையாளர்களால் உபயோகிக்கப்படுமெனவும் அதன் நிறுவுனர் ஸுக்கர் பேர்க் தெரிவிக்கின்றார்.
தற்போது இவ்வசதியின் மூலம் நீங்கள் விரும்பிய சிலரிடையே மட்டும், அதாவது விருப்பமான குழுவினரிடையே மட்டும் தகவல்களைப் பகிரலாம்.
இதன் மூலம் நண்பர் வட்டத்தினிடையே, குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளமுடியும்.
மேலும் அக் குழுவினரிடையே 'சாட்டிங்' , குரூப் 'மெசேஜிங்' மற்றும் குரூப் 'மெயிலிங்' வசதிகளும் இதில் உள்ளன.
இதன் மூலம் பாதுகாப்பாக விடயங்கள் பகிரப்படுவதோடு நமது ' ப்ரைவசி' மேலும் பாதுகாக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி.வீரகேசரி.