Monday, September 6, 2010

'ரிமோட் லொக் அவுட்' முறையை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் ஆரம்பித்த சில காலங்களிலேயே புகழின் உச்சியை அடைந்த பேஸ்புக் 'ரிமோட் லொக் அவுட்' முறையை அறிமுகப்பபடுத்துகிறது.
கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் மீ ' எனும் இணையதளத்தை துவங்க இருப்பதாக வந்த தகவல் போதாதென்று டயாஸ்போரா எனற் பெயரில் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் இணையதளமும் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது முதலிடத்தை ‌தக்க வைக்கும் முயற்சியாக  பேஸ்புக் இணையதளமும் பல புதிய அதிரடி மாற்றங்களை அறிமுகப்படு்த்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி 'ரிமோட் லொக் அவுட்' என்ற புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன்படி நமது பேஸ்புக் கணக்கு லொக் இன் ஆக இருக்கும் பட்சத்தில் நாம் எந்தவொரு கணினியில் இருந்து லொக் அவுட் செய்ய முடியும்.
இதற்கென தனியாக கணக்கு செட்டிங்கில் சில மாற்றங்கள் ‌மேற்கொண்டுள்ளதாக பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கூகிளின் புதிய இணையதளம் "கூகிள் பைஃபர்"

இணையதள உலகில் அனைத்து பாகங்களிலும் தனது ஆக்கிரமிப்பை செலுத்தி வரும் கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பைபர் எனும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. 
இந்த திட்டத்திற்கு கூகிள் பைஃபர் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்மூரமாக ஈடுபட்டுவரும் கூகிளுக்கு அதிகப்படியான ஆதரவு அனைத்துத் தரப்பிலும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
இந்த அதிவேக இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முற்பதிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் என கூகிள் தெரிவித்துள்ளது.
எனவேதான் கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளை தனது பாவனையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள கூகிள் புதிய இணைய தளத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அங்கு கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளையும் அதன் வளர்ச்சிக்கட்டத்தினையும் கூகிள் எங்களோடு பகிர்வதோடு எமது கருத்துக்களை வழங்கவும் வழியமைத்துள்ளது. கூகிள் பைஃபர் தொடர்பான விடயங்களை நீங்களும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த புதிய தளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்