Sunday, May 30, 2010

இரட்டை விமான விபத்து

நம்பமுடியாத குகை வீடுகள் - ஆப்கானிஸ்தான்



















நன்றி,சகோதரர்,ஓட்டமாவடி அரபாத்.

முட்டைகளால் ஒரு கை வண்ணம்



கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டம்!

malatheevu-underskமாலைதீவில் புதுமை நிகழ்ச்சி

மாலைத்தீவு அமைச்சரவை கூட்டம், கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடந்தது. உலகிலேயே கடலுக்கு அடியில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் வெப்பமயமாகி வருவதால் துருவப் பகுதியில் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் 2100ஆம் ஆண்டில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் என, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்திருந்தது.

ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து நூறடிக்கும் குறைவான உயரத்தில் உள்ளது இத்தீவு .எனவே, இந்த பயங்கரத்தை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், என்பதை வற்புறுத்துவதற்காக நேற்று முன்தினம் மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடந்தது. தலைநகர் மாலேவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிபுஷி தீவில், ஆறு மீட்டர் ஆழத்தில் அதிபர் முகமது நஷீத்(42) தலைமையில் கடலுக்குள் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

அமைச்சர்கள் அனைவரும் கடலில் முத்தெடுக்கும் வீரர்களை போன்ற உடையுடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 45 நிமிடம் இவர்கள் கடலுக்கு அடியில் இருந்தனர். அமைச்சரவைக் கூட்டம் 25 நிமிடங்கள் நடந்தது.”உலகம் வெப்பமடைவதால் எங்கள் நாடு கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்’ என, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அமைச்சர்கள் தங்கள் கையில் இருந்த வெள்ளைப் பலகையில் எழுதி தங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டனர்.

கடலுக்கு அடியில் தங்கியிருப்பதற்காக, இந்த அமைச்சர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடலில் மூழ்கும் பயிற்சி பெற்றனர். மாலத்தீவு நூற்றுக்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கியது. இதில் 90 சதவீத தீவுகள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ளது.

நன்றி,நிதர்சனம்

செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை

http://www.geekologie.com/2009/06/19/cell%20phone%20dress.jpgஅறிவியல் வளர்ச்சியின் பயனாக செல்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.

இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார்.

தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார்.

பொதுவாக, டிஸ்கோதே, பார் உள்ளிட்ட அதிக சப்தம் நிறைந்த இடத்தில், செல்போன் அழைப்பு வந்தால் அது சம்பந்தப்பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு மிஸ்டு கால் ஆகிவிடுவதுண்டு.

சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார் ஜியோர்ஜி.

நன்றி,தமிழழகன்

கவலையில்லாத மனிதன்

2005704830066799993_rs
இரண்டு கைகளும் கால்களும் இல்லாமல் 04.12,1982ல் அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் என்ற நகரத்தில் பிறந்த இவர். அவுஸ்ரேலியாவில் உள்ள பிரபல்யமான Main stream school என்ற பாடசாலையில் படித்து வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார்


அங்கங்கள் அனைத்தையும் அழகாய் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக.



புதிய இலவச ஆன்டிவைரஸ்

மைக்ரோசொப்டின் புதிய இலவச ஆண்டிவைரஸ்- Microsoft Security Essentials

நம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.

இது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.

இதன் சிறப்பு அம்சங்கள் :

1. தரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.
2. ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.
3. தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
4. கணினியின் வேகம் குறையாது.
5. முழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.


குறிப்பு உங்கள் விண்டோவ்ஸ் Original ஆக இருக்க வேண்டும்
மென்பொருள் நிறுவ தேவையானவை :

1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.

நன்றி.முதல்மனிதன்

வேற்றுக்கிரக மனிதன்