Friday, February 10, 2012

உழைப்பு - பொன்மொழிகள்


 1.  உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். 
                                   -பிரான்ஸ்
 2.  உழைத்தலே பிரார்த்தனை செய்தல்.
                                   -இலத்தீன்
 3.  உழைப்பு கல்லிலிருந்துகூட ரொட்டியை உண்டாக்கும். 
                                                                              -ஜெர்மனி
 4.  உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. 
                                                                              -இங்கிலாந்து
 5.  உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல் தான் இழிவு.                             
                                   -கிரீஸ்
 6.  நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது. 
                                   -பல்கேரியா
 7.  உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. 
                                   -துருக்கி
 8.  அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை. 
                                   -சீனா
 9.  அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான். 
                                   -இந்தியா
 10.  மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான்.  
                                                                              -அமெரிக்கா