தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் பயன்பாடாக விஞ்ஞானிகள் இன்று புதுமையான பல கண்டுபிடிப்புக்களை எம் கண்முன்னால் காட்டி எம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றனர். இயற்கையின் படைப்புக்களுக்கு சவால் விடும் வகையில் இயற்கைக்கு இணையான பல்வேறு கண்டுபிடிப்புக்களை நாம் காணமுடிகிறது.
இதற்கு ஒத்தாற்போல் அச்சு அசல் ஒரு பறவையின் தோற்றத்துடன் கூடிய ரோபோ பறவையை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். பறவையைப்போன்றே மிக உச்சத்தில் பறக்கவல்ல இந்த இயந்திர பறவைகள் நிஜ பறவைகளைப்போலவே சிறகடித்தும் கழுத்து மற்றும் வால் பகுதிகளை அசைத்தும் திருப்பியும் பறக்கும் திறமையை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான இந்த இயந்திரப்பறவை ரிமோட் கன்றோல் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பறவை ஒன்றின் நிறை 450 கிராம்கள் ஆகும்.
நன்றி, சகோதரர். அன்சார் முகம்மது.