Saturday, March 17, 2012

இந்தியாவின் 2வது பெண் விஞ்ஞானி


நவீன செயற்கைக்கோள் தயாரித்து தமிழக பெண் விஞ்ஞானி சாதனை: விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது
இந்தியாவின் விண்வெளி மற்றும் அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பல சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்தார். அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் பறக்க விட்டு உலக அளவில் சாதனை நிகழ்த்தியது. இந்த சந்திராயன் ராக்கெட் தயாரித்தவர் அதன் திட்ட இயக்குனர் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மயில்சாமி. இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. 


இவர்கள் வரிசையில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் விஞ்ஞானியான வளர்மதி சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த வளர்மதி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். 


இந்தியா தற்போது அதிநவீன மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங்சேட்டி லைட் என்ற செயற்கை கோளை உருவாக்கி உள்ளது. இதனை தயாரித்தவர் தமிழக பெண் விஞ்ஞானி வளர்மதி. இவரிடம் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான திட்டப்பணியை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதையடுத்து அதன் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி வளர்மதி பொறுப்பு ஏற்றார். 


அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இரவு பகலாக உழைத்து செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இதற்கு ரிசாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரிசாட்-1 செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 


அனேகமாக மார்ச் 15-ந்தேதிக்கு பிறகு செலுத்த ஏற்பாடு நடப்பதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 


செயற்கைக்கோள் தயாரிப்பு பற்றி பெண் விஞ்ஞானி வளர்மதி கூறியதாவது:-
நான் கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். 1981-ல் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் என்ஜினீயர் ஆகி இஸ்ரோவில் பணிபுரிந்தேன். ரிசாட்-தயாரிப்பு திட்ட இயக்குனராக இருந்த விஞ்ஞானி தியாகி ஓய்வு பெற்றதும் அதன் திட்ட இயக்குனர் பொறுப்பை நான் ஏற்றேன். 


இவ்வாறு அவர் கூறினார்.

2-வது பெண் இந்தியாவின் செயற்கைக்கோள் தயாரித்த 2-வது பெண்மணி வளர்மதியாவார். முதலாவது பெண் விஞ்ஞானி டி.கே.அனுராதா. இவர் ஜி சாட்-12 என்ற செயற்கைக்கோள் தயாரித்தார். அது கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

கின்னஸ் சாதனை படைத்த நபி(ஸல்) அவர்களின் வாழ்வைக்கூறும் உலகின் மிகப்பெரிய புத்தகம்

 நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப்பற்றிக்கூறும் புத்தகம்,உலகின் மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதiனையை பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாக இது காணப்படுவதுடன், இப்புத்தகத்தை உருவாக்குவதற்கு 11 மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட புத்தமாகவும்,நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப்பற்றிக்கூறும் இப்புத்தகம் விளங்குகின்றது.துபாயின் பிரதி ஆட்சியாளாரும், ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிதி அமைச்சருமான செய்க் ஹம்தான் பின் அல்மக்தூமால் இப்புத்தகமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் அதிகாரிகள், ராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாத்தின் கடைசி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன், சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றிக்கூறும் இப்புத்தகமானது 420 பக்கங்ளைக்கொண்டதுடன் ஆயிரம் கிலோகிராம் நிறையுடையது.
இது 5 மீற்றர் நீளமும்,4 மீற்றர் அகலமும் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் பற்றி சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்புத்தகத்தின் 50,000 சாதாரண பிரதிகளை தனது சொந்தச்செலவில் வெளியிடுவதற்கு செய்க் ஹம்தான் உத்தரவிட்டுள்ளார்.