Sunday, December 5, 2010

பறக்கும் பாம்பு

இது ஆப்ரிக்காவில் மட்டும்......






















விக்கிபீடியா சில உண்மைகள்

விக்கிபீடியா பல்வேறு மாற்றங்களுடன்,மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு பிரசித்தி பெற்ற தகவல் களஞ்சியமாகும்.
 Jimmy Wales என்பவரால் 2001ம் ஆண்டு நிறுவப்பட்டு ஜனவரி 10, 2001ல் இணைய சேவைக்கு வந்தாலும், ஜனவரி 15ல் தான்  Wikipedia.com என்ற இணைய முகவரியுடன் உலா வரத்தொடங்கியது. இத்தினத்தை "Wikipedia Day" என அழைக்கின்றனர்.
ஜனவரி 2001 ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விக்கிபீடியா மே 2001ல் ஆங்கிலமல்லாத வேறு மொழிகளான Catalan, Chinese, Dutch, Esperanto, French, German, Hebrew, Italian, Japanese, Portuguese, Russian, Spanish, and Swedish ஆகிய மொழிகளிலும் தனது சேவையை விஸ்தரித்தது.
Arabic, Hungarian ஆகிய மொழிகள் மிக விரைவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதுடன், செப்டம்பரில்  Polish செர்த்துக்கொள்ளப்படமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆண்டிறுதியில் Afrikaans, Norwegian, and Serbo-Croatian ஆகிய மொழிப்பதிப்புக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனுடன் மட்டும் நின்று விடாது, மென் மேலும் பல்வேறு விரிவாகன்களை விக்கி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு விக்கி  சம்பந்தமாக பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.
மாதாந்தம் 78 மில்லியனுக்கும் அதிகமான வருகையாளர்களுடன், உலகெங்கும் 400 மில்லியனுக்கும் அதிகமான பவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், உலகின் பிரசித்தி பெற்ற இணைய தளங்களின் வரிசையில் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.
அத்துடன், 276 மொழிகளில்  17,000,000 கட்டுரைகளுடன்,  தமிழில் 26,252 கட்டுரைகளையும்  கொண்டுள்ளது.
டிசம்பர்  5, 2010 ம் திகதிய தகவலின் படி 
ஆங்கில விக்கிபீடியாவில்......
3,494,064  கட்டுரைகள்,
22,436,298 பக்கங்கள்,
1447 பகுதிகள்,
430,136,466 பதிப்புக்கள்,
853,602 ஏற்றப்பட்ட கோவைகள்,
13,532,787 பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்,
1,767 நிருவாகிகள்,
நிமிடத்திற்கு 300 சொற்கள் என்ற வேகத்தில் ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களை ஒருவர் தியாகம் செய்து வாசித்தால், ஆங்கில விக்கிபீடியாவின் 1447 பகுதிகளையும் வாசித்து முடிக்க சுமார் 30 ஆண்டுகள் செல்லும்.
2010ம் ஆண்டிலிருந்து  தொடங்கினால், 1447 பகுதிகளையும் வாசித்து முடிக்க 2040 ம் ஆண்டாகும்.அப்போது மேலும் புதிய தகவல்கள் விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கும்.

Amazing Soccer Skill

Nokia X7

எதிர்கால மடிக்கணணி - ROLLTOP