Sunday, October 31, 2010

மரம் பாதி.மனிதன் பாதி.

 இந்தோனேசியாவின் மீன்பிடித்தொழிலாளியான Dede என்பவர் ஆச்சரியமான,அசாதாரண தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடம்பில் கை,கால்ப்பகுதிகளில் மரவேர் போன்ற அமைப்பொன்று வளர்வதுடன், இதன் கிளைகள் வருடத்துக்கு 5Cm நீள அளவில் வளர்வதாக குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் அதன் தழும்புகள் உடம்பு பூராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூரில்  இவரை "மரமனிதன்" என்றே அழைக்கின்றனர்.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக உள்ளூர் வைத்தியர்களினால் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக  BBC இன் உலகின் "அசாதாரண  மனிதர்கள்" சம்பந்தமான ஆவணக்காப்பகம் குறிப்பிடுகின்றது.
Dede யினுடைய  மர்மமான தோல் நோய் சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சியில் University of Maryland ச் சேர்ந்த உலகின் தோல் நோய் வல்லுநர் Dr Anthony Gaspari, அவர்கள் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





2 வயது சாதனைக்குழந்தை.

அமெரிக்காவைச் சேர்ந்த Darell Lilly என்ற இரண்டு வயதுக்குழந்தை அதிசயிக்க தக்க வகையில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்களை உலகப்படத்தில் தொட்டு காட்டி சொல்லி பிரமிப்பில் ஆழ்த்துவதை இங்கே காணலாம்.

செங்கல் உண்ணும் மனிதன்.

இந்தியா,சென்னையைச்சேர்ந்த மணிமாறன் என்ற இளைஞர் செங்கற்களை  தன் பல்லால் கடித்து விரும்பி உண்ணுகிறார்.
இவர் பாறை,பளிங்கு கற்கள் போன்றவைகளையும் உண்ணுவது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் விஷேசமாக செங்கற்களை உண்ணுவது தான் இவருக்கு விருப்பமாகவுள்ளதாம்.

Saturday, October 30, 2010

Crazy Car Circus Show in India "Wall of Death"

உலகிலேயே மிகச்சிறிய மீன்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் சதுப்பு நிலப்பகுதிலுள்ள உவர் நீரில் உலகின் மிகச்சிறிய Paedocypris progenetica மீனினை விலங்கியல் நிபுணர்கள்  கண்டுபிடித்துள்ளனர். முதிர்ச்சியடைந்த மீனின் நீளம் 7.9 மில்லிமீற்றர்களாகும்.




"பேஸ்புக்" கொலை

பேஸ்புக் பாவிக்க இடையூறு விளைவித்த குழந்தையைக் கொன்ற தாய்!
"பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார்.
அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் 'பேஸ்புக்'கில் உள்ள ' பார்ம்வெளி ' எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார்.
இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.இவருக்கு சுமார் 25 முதல் 50 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி. www.z9world.com

Friday, October 29, 2010

ஒரு மில்லியன் டொலர் ஆடை.

1500 ஆஸ்திரேலிய தங்க நாணயங்களைக் கொண்டு ஜப்பான்,டோக்கியோ Bunka Fashion College சேர்ந்த மாணவர்கள் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர். 
மீன் செதில் போன்றிருக்கும் தங்க நாணயங்கள் பளபள வென மின்னுவதுடன், பார்ப்போரை கண் கூசச்செய்கின்றது.
இந்த  நாணயங்கள் ஆஸ்திரேலிய தங்க நாணய அச்சகத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.மூன்று பகுதிகளாக இந்த ஆடை நெய்யப்பட்டுள்ளது.முழு நீள ஆடையின் நிறை 10 Kg (22 இறாத்தல்).மேலங்கியின் இரண்டினதும் நிறை 21Kg (46 இறாத்தல்)ஆகும்.
இதன் பெறுமதி 1.2 மில்லியன் டொலர்களாகும்.



Thursday, October 28, 2010

கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உயிரினம்.





கனடாவின் ஹட்சன் பிரதேசத்தில் Kitchenuhmaykoosib Inninuwug நகருக்கருகில்  இந்த அதிசய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்திலும்,நீரிலும் வாழும் இந்த மர்ம உயிரினம், நீண்ட கால்களும்,பெரிய தலையுடனும்,ஆப்ரிக்க காட்டுப்பன்றியினுடைய வாயமைப்பையும், எலியினுடைய வாலமைப்பையும் கொண்டதாக  காணப்பட்டது.
1950 ம் ஆண்டு காலப்பகுதியிலும் இது போன்றதொரு உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக  Darryl Sainnawap என்பவர் குறிப்பிட்டுள்ளார். 

Wednesday, October 27, 2010

மூன்று கை(க்)குழந்தை.

2006ம் ஆண்டு சீனாவின் (Anhui) அன்ஹுய் மாகாணத்தில் அதிசயமான முறையில் வலது பக்கம் ஒரு கையும், இடது பக்கம் இரண்டு கைகளுமாக  மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது.
  லூய் ஜுஞ்சி (Liu Junjie) எனப்பெயரிடப்பட்ட இந்த அதிய குழந்தைக்கு இன்னுமொரு அதிசயம் ஒரு சிறுநீரகம் மாத்திரமாகும். 
மூன்றாவதுள்ள கையை அகற்றுவதற்காக சத்திர சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க குழந்த தொடர்பாக கருத்து தெரிவித்த Shanghai Children's Medical Center தலைமை வைத்திய நிபுணர், சென் போச்சங்(Chen Bochang), ஒரு சிருநீரகத்துடன் பலயீனமாக குழந்தை காணப்படுவதால்,இடது கை வளர்வதற்கு வாய்ப்புக்கள் அரிதாகவுள்ளதாகவும்,மூன்றாவது கை அகற்றப்பட்டாலும்,குழந்தையின் எதிர்காலம் கஷ்டமானதாகவே அமையும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், மூன்றாவது கை வெட்டி அகற்றபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





வீடியோ

சத்திர சிகிச்சையின் பின்னர்.....

Tuesday, October 26, 2010

4 அடி நீளப்பூனை.

 Reno,Nevada வைச்சேர்ந்த  Robin Hendrickson and Erik Brandsness என்பவர்களுக்கு சொந்தமான  48.5 அங்குல  நீளமுள்ள  5 வயதுடைய Stewie என்ற பெயருடைய பூனை உலகிலேயே மிக நீளமான பூனையாக புதிய உலக சாதனையை நிலை நாட்டியுள்ளது.

ஏற்கனவே  உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ள  48 அங்குல உலகின் நீளமான பூனையை  1/2 அங்குல கூடுதல் நீளத்தால் முந்தி, இந்த புதிய சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக Reno Gazette பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சராசரியாக  ஒரு வளர்ந்த பூனையின் நீளம் அதன் மூக்கின் நுனியிலிருந்து வால் எலும்பின் நுனி வரை சுமார் 18 அங்குலம் வரை தான் இருக்குமாம்.


Monday, October 25, 2010

ஒளி புகும் தலையுடன் மீன்.

கலிபோனியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒளி புகக்கூடிய தன்மை கொண்ட தலையுள்ள  மீன்களை படம் பிடித்துள்ளனர்.

இதனூடாக,  சாதாரண கண்களுடன்  மிகவும் ஆழமான இருண்ட கடலில் மீன்கள் எவ்வாறு வாழ்கின்றது? என்ற கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக   நீடித்த மர்மத்துக்கு விடை கிடைத்துள்ளது.

இதற்கு முன்னரும், 1939 ல் கடல் வாழ் உயிரியலாளர்கள், நன்கு ஒளிரும் குழல் போன்ற அமைப்புடைய கண்களுடன்  மீன்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும்,மீனின் தலையின் மேற்பகுதியில் காணப்பட்ட கண்கள் ஓரிடத்தில் பொருத்தப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

இந்த அபூர்வமான கண்களுடன்  மீனுடைய தலைப்பகுதியில் அமைந்துள்ள  ஒளி புகும் தன்மை கொண்ட பகுதியை மீன்களால் திருப்ப முடியும் என தற்போதைய புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. 


 

 

Saturday, October 23, 2010

பறக்கும் மீன்

பறக்கும்  இந்த அற்புதமான மீன்களானது, நீரின் மேற்பரப்பில் பாய்வதில்லை. மாறாக  சுமார் 200 M தொடக்கம்  400M வரை பறக்கின்றன.
இந்த மீன்களுக்கு 30Cm -40Cm வரையிலான பறக்கக்கூடிய மீன் சிறகுகள் காணப்படுகின்றன.சுமார் 30-50 M வரையான தூரத்துக்கு மணிக்கு 60Km வேகத்தில் இவைகளால் பறக்க முடிகிறது. சிலவன 100M வரையான தூரத்துக்கு பறக்கவும்  செய்கின்றன.
இந்த பறக்கும் மீன்கள் 45 செக்கன்கள் வரை பறந்ததற்கான பதிவுகள் உள்ளன.









உலகிலேயே மிகச்சிறிய அனிமேஷன்.

90 செக்கன்கள் ஓடக்கூடிய "Dot'' பாத்திர தலைப்பைக்கொண்ட உலகின் மிகச் சிறிய அனிமேசன் படமொன்றை ஐக்கிய இராஜ்யத்தின் Aardman Animations நிறுவனத்தினர் தயாரித்துள்ளனன்ர்.இது உலக சாதனப்புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
9 MM உயரமான Dot (பென்சிலின் முனையளவு) என்ற பெண் ஒரு மாயாஜால உலகினுள் நுழைகின்ற போது கம்பளியிலான ஒரு சட்டையைக் கண்ணுற்ற அவள், தனது பயணத்தை தொடராமல் தூங்குகின்றாள். சிறிது நேரத்தில் சட்டையினுடைய நூல் இழைகள் பிரியத்தொடங்குகின்றன.திடுக்கிற்று எழுந்த அவள் நாணயங்கள்,பென்சில் சீவப்பட்ட துண்டுகள்,குண்டூசியின் கொண்டை போன்றவற்றின் மேலால் ஓட்டமெடுக்கின்றாள்.
இது தான் அனிமேசன் படக்காட்சி .
இப்படக்காட்சி Nokia N8 கைத்தொலைபேசியுடைய 12 Megapixel கமேராவுடன் Bio-engineer Daniel Fletcher at the University of California, Berkeley, என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Cell-scope என்றழைக்கப்படும் 50x நுணுக்குக்காட்டி இணைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதோ  படக்காட்சி.

Friday, October 22, 2010

ஒரு உடம்பில் இரு உயிர்கள்.

7ம் திகதி மார்ச் மாதம் 1990ம் ஆண்டு அமெரிக்காவின் Carver County, Minnesota வில் பிறந்த Abigail Loraine Hensel and Brittany Lee Hensel சகோதரிகள் தான் ஒரு உடம்பில் இரண்டு உயிர்கள் என்ற இந்த அதிசயத்துடன் வாழ்கின்றனர்.
இவர்களில்  வலது பக்கமாகவுள்ளவர் Abigail  இடது பக்கம் உள்ளவர் Brittany. இவர்கள் இருவருக்குமுள்ள இரு முதுகெலும்புகளும் இடுப்பு எலும்புக்கூட்டுப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
2 தலைகள்,
2 இரைப்பைகள்,
3 சுவாசப்பைகள்,
2 கைகள் (ஒரு கை பயனற்ற விதத்தில் இவருடைய தலைகளுக்கிடையிலும் வளர்ந்த மூன்றாவது கையினை சிறு பராயத்திலேயே அகற்றி விட்டனர்),
2 மார்புகள்,
2 இதயங்கள்(உடம்பினுடைய இரத்த ஓட்டம் இரண்டு இதயங்களுக்கிடையிலும் பகிரப்பட்டுள்ளன),
1 ஈரல்,
3 சிறு நீரகங்கள்,
2 பித்தபைகள்,
1 சிறு நீர்ப்பை,
1 எலும்புக்கூடு,
1 பெருங்குடல்,
1 இனவிருத்திப்பகுதி,
என அங்கங்கள் அவர்களில் காணப்படுகின்றன.
















Wednesday, October 20, 2010

இரண்டு முக இந்தியக்குழந்தை.

உத்தர பிரதேசத்திலுள்ள (Nagar) நாகர் மாவட்டத்தின் கிராமமொன்றில் இரண்டு முகங்களுடன் ஒரு அதிசய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டு முகங்களுடன்,இரண்டு வாய்,நான்கு கண்களும் இக்குழந்தையில் காணப்படுகின்றன.
இந்த அதிசய குழந்தையைப் பார்ப்பதற்காக வரும் மக்கள் கூட்டத்தினர் பணம் மற்றும் அன்பளிப்புக்களையும் வழங்கிச் செல்கின்றனர்.
இக்குழந்தையால் சர்வ சாதரணமாக உண்ண, பருக முடியுமா எனக்கூற முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ள வைத்தியர்கள்,  இவ்வாறு ஒட்டிய நிலையில் வேறொரு உருவ அமைப்பில் பிறந்த Abigail and Brittany Hansel போன்று
 உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



  
வீடியோ