Wednesday, July 13, 2011

பார்வையற்ற பத்திரிகையாளர் - ஷானியா ஷைதீ

"கண் பார்வை இல்லேன்னா என்ன?'' பார்வைத் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. இன்று முன்னணிப் பத்திரிகையாளர் சானியா ஷைதீ. 
பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரம் தான் என் சொந்த ஊர். எனக்கு ஒரு தங்கை, தம்பி. சிறு வயதில், எனக்குப் பார்வை பறிபோனபோது. என்னை சுற்றத்தார் ஏளனம் செய்தனர். என் பெற்றோர் தான், என்னை எல்லா விதத்திலும் உற்சாகப்படுத்தி வளர்த்தனர். பள்ளிப் பாடங்களை ஒரு கேசட்டில், பதிவு செய்து என்னை படிக்க வைத்தார் என் அம்மா.
நான் பள்ளியில் படிக்கும் போது, எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் எடுக்கத் தயங்கும் உடற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தேன். தட்டு எறிதல் பிரிவில், நான் பள்ளியில் பல பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
கல்லூரி படிப்பை முடித்த பின், , தற்போது ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன். மாஸ் கம்யூனிக்கேஷன் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளாக, பகுதி நேரப் பத்திரிகையாளராக, செய்தித்தாள், வாரப் பத்திரிகை, என்று ஊடகங்களுக்கு "பிரீலான்ஸ்'' செய்தியாளராக பணியாற்றுகிறேன்.கடந்த 2004ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை பேட்டி கண்டது தான் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனை.அந்தப் பேட்டியின் மூலம், என்னை ஏளனம் செய்தவர்கள் முன், பெரிய சாதனையை நிகழ்த்தியதாக உணர்ந்தேன். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, ஒவ்வொரு போட்டிக்கும் நேரில் சென்று செய்திகள் சேகரித்த அனுபவம், என் வாழ்வில் மறக்க முடியாதது. என தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

அழகான தளபாடங்கள்.