Sunday, March 6, 2011

கைகளில்லாத கருணை உள்ளம்.


Brilliant Kid


உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவை.


கைகளில்லாத கலைஞன்


15 கொம்புகளுடன்  அதிசய டயனோசரஸ் 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டயனோசரஸ். இயற்கை பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்றவற்றின் காரணமாக  அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்த அடையாளங்கள் காலச்சுவட்டில் இருந்து மறைந்து விடவில்லை.
உலகில் வாழ்ந்து மடிந்த டயனோசரஸ்சின் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது அரியவகை டயனோசரஸ்கள்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உதா பகுதியில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி  ஆய்வு மேற் கொண்டனர். அப்போது வினோதமான அரிய வகை விலங்குகளின் 2 ராட்சத எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
அதில் முகத்தாடையின் முன் புறத்தில் காண்டா மிருகத்தை போன்ற ஒரு கொம்பு இருந்தது. மேலும், அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் மற்ற 11 கொம்புகளுமாக மொத்தம் 15 கொம்புகள் இருந்தன. எனவே, அந்த அரிய விலங்கின் எலும்பு கூடுகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.

அவையும் டயனோசரஸ் வகையை சார்ந்தது என கண்டறிந்தனர். அது வாழ்ந்த போது 5M நீளமும், 2500Kg எடையுடனும் இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் உதா மியூசியத்தின் ஆய்வகத்தில் இது குறித்து தொடர்ந்து ஆய்வு  நடந்து வருகிறது.
Thanks To TCO.

சுவாசிக்க கூடிய அதிசய எந்திர மனிதன்.

அமெரிக்காவில் அதிசய ரோபோ(எந்திர மனிதன்)

ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு மனிதனைப் போன்று வாய், மூக்கு உள்ளன.
இந்த ரோபோவானது சுவாசிக்கவும் செய்கிறது. அப்படி மூச்சு விடும்போது அதன் மார்பு விரிந்து சுருங்குகிறது. `மேன்னி’ என்ற இந்த ரோபோவுக்கு மனிதனைப் போலவே தோல் இருக்கிறது. வியர்வை ஏற்படும் வகையிலும் அமைத்திருக்கிறார்கள். இதன் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முடியும். இந்த ரோபோ நடக்கிறது, குனிகிறது. கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருகிறது.
தரையில் இதனால் உட்கார முடியும். தரையில் தவழ்ந்து செல்லவும் முடியும். எந்திர மனிதன் என்ற சொல் இதற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். அமெரிக்காவில் உள்ள பாட்டலே ஆய்வுக்கூடம் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
அசல் மனிதனைப் போல இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு `மேன்னி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 20 லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் மேன்னி ரோபோ, அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் யுடா மாநிலத்தில் உள்ள ஆயுத சோதனைக்களத்துக்கு மேன்னி கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இந்த சோதனைத் தளம், ஆபத்தான வேதியியல், உயிரியல் ஆயுதங்களைச் சோதிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உடையைத் தயாரிக்க அந்நாட்டு ராணுவத் தலைமையகம் விரும்புகிறது. அதற்கான பரிசோதனைகளுக்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படும்.

15 வயதில் 209Kg நிறை எடை .