Wednesday, May 19, 2010

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை கேன்சர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

செல்போன் அதிகளவில் பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் (WHO) நடத்திய ஆய்வில் தினமும் அரைமணிநேரம் ‌மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நன்றி, Tutyonline

ரோபோ நடத்திவைத்த திருமணம்

ரோபோ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இயந்திர மனிதனால் உலகில் முதல் தடவையாக ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த விநோத திருமணத்தை மந்திரங்கள் சொல்லி நடத்திவைத்தது, மினுக்கும் கண்களும், பிளாஸ்டிக் குதிரைவால் கொண்டையும் போட்டிருந்த ஐ ஃபேரி என்ற இயந்திர யுவதி.

ஜப்பானில் அதிவேகமாக வளர்ந்துவரும் ரோபோ உற்பத்தித் தொழில்துறை மூலம் இந்த ஜோடி ஒருவரோடு ஒருவர் பழக நேர்ந்திருந்தது.
இவர்களுக்கு திருமணம் செய்த ஐ ஃபேரி ரோபோவை உருவாக்கியது மணப்பெண் சடோகோ ஷிபாடா வேலைபார்க்கின்ற நிறுவனம் ஆகும்.

"மனிதர்களுடைய அன்றாட வாழ்வின் பல விஷயங்களில் ரோபோக்களுக்கு இடமிருக்க வேண்டும் என்று எப்போதுமே நம்பிவந்துள்ளவள் நான். இந்த அழகான இயந்திர யுவதி என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்." என்கிறார் மணப்பெண்.

புதிய கணவர் டொமோஹிரோ ஷிபாடா ஒரு பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதன் பாடத்துறையில் பாடம் நடத்துகிறார்.

"முதலிலே இருவரும் பழக ஆரம்பிதததற்கு இந்த ரோபோக்கள்தான் காரணம். எனவே ரோபோவை வைத்து திருமணம் செய்துகொள்ள நாங்கள் முடிவெடுத்தோம்." என்கிறார் இந்த மாப்பிள்ளை.

நன்றி.www.z9world.com