Tuesday, June 22, 2010

மிகவும் வெப்பமான ஆண்டு 2010, வானிலை ஆராய்ச்சியாளர்கள்

‘உலக வரலாற்றில் 2010ம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு என, அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிலம் மற்றும் கடலின் மேற்பரப்பில் நிலவிய வெப்பநிலையை கணக்கிட்டு பார்த்து, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்கள்  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
உலகில் உள்ள நாடுகளிலுள்ள வெப்பநிலை முழுவதையும் ஆய்வு செய்து, அதன் சராசரி அளவை சேகரித்தனர். இதில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு என்பது தெரிய வந்துள்ளது. இந்த நான்கு மாதங்களில், உலகின் சராசரி வெப்ப நிலை 13.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது, கடந்த 20ம் நூற்றாண்டில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 0.69 டிகிரி செல்சியஸ் அதிகம். இதேபோல், இந்த நான்கு மாதங்களில், ஏப்ரல்தான் அதிகம் வெப்பமான மாதமாக இருந்துள்ளது. இவ்வாறு வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Thanks To........Malasiyaindru.

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை!

குவைத் நாட்டு இளவரசர் ஷேக் பசேல் சலீம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றது அவருடைய சொந்த மாமா என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்த குவைத் அரசுரீதியிலான செய்திக்குறிப்பில் 'இளவரசர் சேக் பசல் சலீம் சபா அல் சலீம் அல் சபா அகால மரணம் அடைந்து விட்டார்' என்று கூறப்பட்டுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்ற தகவல்களை குவைத் அரசு தெரிவிக்கவில்லை.
அகால மரணம் அடைந்த இளவரசர் சேக் பசல் சலீம்- க்கு வயது 52.
 சேக் பசல் சலீம்- க்கும் அவருடைய மாமா முறையிலான உறவினர் ஒருவருக்கும் இடையே கார் வாங்குவது குறித்து வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த மாமா, சேக் பசல் சலீமை நோக்கி பலமுறை சுட்டிருக்கிறார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார் என்று கூறப்படுகிறது.
இளவரசரைக் கொன்ற கொலையாளி கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
சேக் பசல் சலீம் குவைத் அரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks To......www.z9world.com

கோடையை சமாளிக்க தினமும் 5 தக்காளி

தினமும் 5 தக்காளிகளை உட்கொண்டால் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை பெறுவீர்கள் என்கிறது ஓர் ஆய்வு. தக்காளியுடன் பழச்சாறும் சூரிய வெப்பக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் சக்தியை உங்கள் உடலுக்கு அளிக்கிறது.



நியூகாஸ்டல் பல்கலை மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய புதிய ஆய்வி‌ன் மூல‌ம், நமது உணவில் தினமும் தக்காளியை அதிக அளவில் பயன்படுத்தும்போது, சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை நாம் பெறுகிறோம் என்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.
சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோளில் இருக்கும் செ‌ல்க‌ள் பாதிக்கி‌ன்றன. இதனை தக்காளியில் இருக்கும் ஆண்டியோக்சிடென்ட் எனப்படும் ஐகோபென்கள் தடுத்து நிறுத்துகின்றன.
5 தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய உடன் அதிக அளவில் (விற்கும் விலைக்கு இது சாத்தியம் இல்லைதான்) தக்காளியை உண்பதும் பிரச்சினையாகிவிடும். எனவே உங்களது அன்றாட உணவில் போதுமான அளவு தக்காளி சேர்த்துக் கொ‌ள்ள‌ப்ப‌ட்டா‌ல் த‌னியாக இத‌ற்கென எ‌ந்த முய‌ற்‌சியு‌ம் எடு‌க்க வே‌ண்டா‌ம்.
மேலும், அ‌ன்றாட உ‌ண‌வி‌ல் த‌க்கா‌ளி இட‌ம்பெறாதப‌ட்ச‌த்‌தி‌ல், தக்காளிச் சாறு செய்து உண்பதும், தக்காளியை ரசமாக வைத்து சாப்பிடுவதும் சிறந்தது.
Thanks To.....Pathivu 

பார்வையாளர்களைக் கவர உயிரை பணயம் வைக்கும் மனிதர்

மிருகக் காட்சிச் சாலைக்கு பார்வையாளர்கள் அதிகளவில் வருவதற்காக அவர்களைக் கவர தனது உயிரைப் பணயம் வைத்து ஒருவர் வேலை செய்கின்றார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் மலபோன் மிருகக் காட்சிசாலை உள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான இந்த மிருகக்காட்சி சாலையில் முதலைக்கு ஒரு பணியாளர் உணவூட்டும் காட்சி பிரபலமாக இருக்கிறது.
அந்த பணியாளர் கம்பி தடுப்பு வேலிக்கு மீது சாய்ந்தபடி தலை கவிழ்ந்த நிலையில் தொங்கிக்கொண்டு முதலைக்கு உணவு கொடுக்கிறார். அந்த உணவை கவ்விப்பிடிக்க சில அடி உயரத்துக்கு முதலை பாய்ந்து குதிக்கிறது.
அப்படி குதிக்கும்போது அது அந்த ஊழியரை தொட்டு விடும் தூரத்துக்கு வந்து விடுகிறது. அப்படி அது குதித்து தொட்டு விட்டாலும் ஆபத்து, அவர் கால் தவறி முதலையின் வாய்க்குள் விழுந்து விட்டாலும் ஆபத்து.
Thanks To....Thamilkathir.

பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி


பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் நகரத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியான ஹெய்லி ஒகினேஸ் என்பவர் 96 வயதுப் பாட்டியாக வாழ்ந்து வருகிறார்.எழுந்தமானமாக எட்டு மில்லியன் பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவருக்கு ஏற்படக் கூடிய ”இளமையில் முதுமை” என்கிற நோய் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நோயை ஆங்கிலத்தில் 'Progeria' என்பார்கள்.இந்த நோய் மரபணுக்களின் ஒழுங்கீனங்கள் காரணமாக ஏற்பட்டு விடுகிறது. இந்நோயால் பீடிக்கப்படுகின்றவர்கள் 13 வயது வரை வாழ்கின்றமையே அபூர்வம் ஆகும்.சில 19 வயது வரை வாழ்ந்திருக்கின்றார்கள்.40 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் என்று எவரையும் கூறி விட முடியாதாம்.
Thanks To....www.z9world.com