இந்த ஆண்டு (2010) துபாயில் மிகக்கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட உலகின் முழுக்கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட, உலக சாதனைக் கட்டடமான Burj Khalifa விலிருந்து உலக சாதனைப்பாய்ச்சலினை ஆகாயத்திலிருந்து பாய்வதில் தேர்ச்சி பெற்ற, பல்வேறு சாதனைகள் புரிந்த Omar Al Hegelan and Nasser Al Neyadi ஆகிய இருவரும் பாய்ந்து புதிய உலக சாதனை நிலை நாட்டியுள்ளனர்.
இவர்களில் Al Hegelan என்பவர், 1997 ம் ஆண்டு வரை 15000 தடவைகள் ஆகாயத்திலிருந்து பாய்ந்துள்ளதாக Sky News க்கு தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் 828m (2,717ft) உயரமான உலகின் உயர்ந்த கட்டடத்தின்
2,205 (feet) அடி உயரத்திலிருந்து பாய்ந்து இந்த சாதனையைப்புரிந்துள்ளனர்.
இவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆயத்தங்களை நிரூபித்து இதிலிருந்து பாய்வதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுமதி சுமார் ஒரு மாத கால முயற்சியின் பின்னர் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.