Sunday, June 20, 2010
தேன்..தேன்...தேன்.
தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.
மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.
ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.
மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.
நன்றி,பொன்மாலை
உங்களுக்கு தெரியுமா?
* பென்குயினால் பறக்க முடியாது; ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.
* யானையின் துதிக்கையில் நான்கு லட்சம் தசைகள் உள்ளன.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து -ஔ
* மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.
ஒரே நாளில்
ஒரே நாளில் சராசரியாக 4,800 வார்த்தைகள் பேசுகிறோம்.
இதயம் 1,03 689 தடவை துடிக்கிறது.
70 லட்சம் மூளைச் செல்கள் வேலை செய்கின்றன.
ரத்தம் 16 கோடியே 80 லட்சம் மைல்கள் பயணிக்கிறது.
விரல் நகங்கள் 0.071714 அங்குலம் வளர்கிறது.
நன்றி,பொன்மாலை
குளிர்சானப்பெட்டியில் விளையும் காய்கறி
குளிர் சாதன பெட்டிகள் (பிரிஜ்) காய்கறிகள், உணவுப் பண்டங்களை பதப்படுத்தி வைக்க பயன்படுகிறது. தற்போது இதில் கால மாற்றத்துக்கேற்ப நவீனத்தை புகுத்தி சமையலுக்கு தேவையான காய்கறிகளை வளர்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. காய்கறிகளை மட்டுமல்லாமல் கடல் உணவுப் பொருட்களான மீன், நண்டுகளையும் வளர்க்க முடியும்.
இந்த பிரிஜ் பல அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேற்புறத்தில் உள்ள அடுக்குகளில் காய்கறிகளை வளர்த்துக் கொள்ளலாம். அதற்கு தேவையான வெப்பம் கிடைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. அடிப்பகுதியில் உள்ள அடுக்கில் மீன்களை வளர்க்கலாம். மேலுள்ள தாவரங்கள் வளர்க்கும் அடுக்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கீழே வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் மீன்களின் உணவுக்கு கவலைப்படத் தேவையில்லை. மேலும் பயன்படுத்தியதுபோக உள்ள காய்கறி கழிவுகளையும் இதில் போட்டு வைத்தால் அதில் இருந்து எரிபொருளும் தயாரிக்கவும் முடியும். இதைக் கொண்டு ஒரு காரை இயக்க முடியுமாம்.
இந்த பிரிஜ்ஜின் பெயர் `ப்ருகல் பிரிஜ்'. பிலிப்ஸ் நிறுவனம் இதை தயாரித்து உள்ளது. இனி நமக்கு தேவையான காய்கறிகளை வீட்டுத் தோட்டத்துக்கு பதிலாக சமையல் அறையிலேயே வளர்த்துக் கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமான காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் நேரடியாகப் பெறலாம்.
மாறி வரும் வாழ்க்கை முறையில் வருங்காலத்தில் இது எல்லோர் வீட்டிலும் அத்தியாவசியமாகிவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி,பொன்மாலை
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்
சிலி பாலைவனத்தில் தொடங்கியது
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் பணி சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் தொடங்கியது. இதற்காக வானியல் ஆராய்ச்சி நிபுணர் குழு சிலி நாட்டுக்குச் சென்றுள்ளது. இந்த டெலஸ்கோப் நிறுவும் பணி வருகிற 2018 ஆண்டு நிறைவடையும்.
உலக நாடுகள் பலவும் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதில் பிரிட்டனில் இருந்து செயல்படும் ஈரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி ஆராய்ச்சி மையமும் (European Southern Observatory , ஒன்று. பல நாடுகளைச் சேர்ந்த வானியல் நிபுணர்கள் இணைந்து செயல்படும் மையம் இது. இந்த மையம் தான் சிலி நாட்டில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில், உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிஞர் குழுவில சிலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர், ஜெர்மன் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த மிகப்பெரிய டெலஸ்கோப்பிற்கு ஈரோப்பியன் எக்ஸ்ட்ரீம்லி லார்ஜ் டெலஸ்கோப் (European Extremely Large Telescope என பெயரிடப்பட்டுள்ளது.
138 அடி சுற்றளவுள்ள இந்த டெலஸ்கோப்பை சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் நிறுவக் காரணம், இந்தப் பகுதியில் தான் வருடத்தில் முழுக்காலமும் வானம் மேகமின்றி காணப்படுகிறது. வான ஆராய்ச்சிகளுக்கு மிகவும் ஏற்றப் பகுதியாகக் கருதப்படும் இங்கு ஏற்கனவே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2011 டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த மாபெரும் டெலஸ்கோப் பணி, ரூ.540 கோடியில் செய்யப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம் வான ஆராய்ச்சிகள் பல மடங்கு மேம்பாடு அடையும் என்றும், இதனால் பூமி மற்றும் விண்வெளி குறித்த அரிய உண்மைகளை மனிதன் விரைவாக அறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.
நன்றி,தமிழ்வாணன்.
ஒரேயொரு இருதயத்துடன் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகள்
பொதுவான ஒரேயொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து உயிர் வாழும் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகளை படத்தில் காணலாம். அமெரிக்க அரிஸோனா மாநிலத்திலுள்ள குயீன் கிறீக் நகரைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர் பெய்லி ஆகிய மேற்படி இரட்டைக் குழந்தைகள், தனியொரு இருதயம் மற்றும் ஈரலுடன் மார்பு எலும்பிலிருந்து தொப்புள் வரை இணைப்பைக் கொண்டுள்ளன. இக் குழந்தைகள் வளர்ந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் இரு வருட காலப் பகுதியில் அவர்களை வேறு பிரிக்காவிட்டால், அவர்கள் உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு குழந்தைகளை வேறு பிரிக்கும் போது ஒரு குழந்தைக்கு இருதய மாற்று சிகிச்சையும் மற்றைய குழந்தைக்கு ஈரல் மாற்று சிகிச்சையும் செய்ய நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி குழந்தைகளின் பெற்றோரான டோர் (34 வயது) மற்றும் மான்டி (32 வயது) ஆகியோர் அக் குழந்தைகளை வேறு பிரிக்கும் முகமாக சியட்டில் சிறுவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக வேறு பிரிக்கப்படும் பட்சத்தில், ஒரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து வேறு பிரிக்கப்பட்ட உலகின் முதலாவது இரட்டைக் குழந்தைகள் என்ற பெருமையை அவை பெறும்.
டோர், மான்டா தம்பதிக்கு ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர்.
நெற்றியில் கொம்புடன் அதிசய பெண்மணி
சீனாவைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவரின் முகத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் கொம்பு ஒன்று வளர்ந்துள்ளது. ஹெனான் மாகாணத்திலுள்ள லின் லோயு கிராமத்தைச் சேர்ந்த 101 வய தான ஸாங் றுயிபாங்கின் நெற்றியில் கடந்த வருடமே மேற்படி அச்சுறுத்தும் வகையிலான கொம்பு உருவாக ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அக்கொம்பு 2 அங்குல அளவிற்கு வளர்ந்துள்ளது. தனது முகத்தில் வளர்ந்துள்ள இந்த அவலட்சணமான கொம்பால் மேற்படி மூதாட்டி மிகவும் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸாங் றுயிபாங்கின் 6 மகன்மாரில் கடைசி மகனான ஸாங் குயோஸெங் (60 வயது) விபரிக்கையில், தனது தாயாரின் நெற்றியிலுள்ள தோல்பகுதி கடினமடைந்தே கொம்பை ஒத்த இந்த தோற்றவமைப்பு உருவானதாகவும் தாம் அது தொடர்பில் பெரிதாக கவனமெடுக்கவில்லை எனவும் கூறினார்.
இந்த அதிசய கொம்பு குறித்து ஸாங் றுயி பாங்கின் மூத்த மகன் ஸங் (82 வயது) கூறுகையில், "எனது தாயாரின் நெற்றியின் வலது பக்கத்தில் புதிதாக ஒரு அடையாளம் தோன்ற ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரு கொம்பு என்றே நான் நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
மேற்படி பெண்ணிடம் வளர்ந்துள்ள கொம்புருவானது தோலினுள் சில அங்குல ஆழத்திற்கு வளர்ச்சியை கொண்டுள்ளது.
துபையில் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்
துபையில் உள்ள குளோனிங் ஆய்வகத்தில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மையத்தில் முதலாவது ஒட்டகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது ஒட்டகம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண் ஒட்டகமாக உருவாக்கப்பட்ட இதற்கு பின் செகான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது பிப்ரவரி 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உருவாக்கப்பட்டதாக ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுமார் 383 நாள்களுக்குப் பிறகு இது உருவானது. காளை மாடு ஒன்றின் செல் மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட்டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டகம் நலமுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உருவாக்கப்பட்டதாக இம்மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
துபையில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் (சிஆர்சி) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இம்மையம் 2008-ம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கடிதம் ரூ. 38 1/2 லட்சத்துக்கு ஏலம்
லண்டன், ஏப். 19-
உலகிலேயே மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் டைட்டானிக். 1517 பேருடன் பயணம் செய்த இக்கப்பல் கடந்த
1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்தனர்.
இக்கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடித தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட
ஒரு கடிதம் லண்டனில் ரூ. 38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இந்த கடிதத்தை கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த அடோல்ப் சபீல்டு என்பவர் தனது மனைவிக்கு அன்புடன்
எழுதியிருந்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அனுபவம் குறித்து அதில் எழுதப்பட்டிருந்தது.
கப்பல் மூழ்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இக்கடிதம் எழுதப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகம்
இக்கடிதத்தை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த அருங்காட்சியகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
நன்றி - மாலை மலர்.
எவரெஸ்ட் சிகர உச்சியில் இங்கிலாந்து வீரர் சாவு
பெய்ஜிங், ஜூன். 4-
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் கின்லோஜ். மலை ஏறும் வீரர். இவர் தனது குழுவினருடன் சீனப் பகுதியில்
இருந்து இமய மலையில் உள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினார்.
கடந்த மாதம் 25-ந் தேதி இவர் சீன பகுதியில் இருந்து 29 ஆயிரத்து 95 அடி உயரத்தில் (8,800 மீட்டர்) உள்ள எவரெஸ்ட்
சிகரத்தில் ஏறினார். உடல் நலக்கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஆனால் அவரது உடலை கீழே எடுத்து வரமுடியாமல் மலை ஏறும் குழுவினர் அவதிப்படுகின்றனர். ஏனெ னில் அங்கு
போதுமான ஆக்ஜிஜன் இல்லை. மிக மோசமான தட்ப வெப்பம் நிலவுகிறது என்று சீன மலையேறுவோர் சங்க துணைத்
தலைவர் யங்பெங் தெரிவித்தார். இந்த ஆண்டில் மட்டும் சீன பகுதியில் இருந்து எவ ரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 4 பேர்
பரிதாபமாக இறந்துள்ளனர். அவர்களில் கின்-லோச் 4-வது நபர் ஆவார்.
நன்றி - மாலை மலர்.
ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது. ஒரேயொரு மூளையுடைய ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்த உலகத்திலேயே இவர்கள் மாத்திரம்தான். ரரிஅனா-கிரிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது மூன்று வயது.இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர். இவர்களுக்கு வேறு யாரிடமும் காணவே முடியாத தனித்துவமான சிறப்புத் தன்மைகள் பல இருக்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர்.
குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிரிஸ்ராவும், கிரிஸ்ராவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளைக் காண முடிகின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.சாதாரணமாக ஒட்டிப் பிறந்த ஏனைய இரட்டைக் குழந்தைகளால் செய்ய முடியாத இவ்வாறான பல செயல்களை இந்த இருவரும் செய்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மருத்துவ உலகம் இவர்களைப் பார்த்து அதிசயிக்கின்றது.
உலகத்தின் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் தாண்டி இவர்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இவர்களால் நன்றாகவே நடந்து திரிய முடிகிறது.இவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் உண்டு. உதரணமாக எந்தப் பாதையால் நடக்கலாம்?, என்ன செய்து கொள்ளலாம்? போன்ற விடயங்களில் இவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடத்தான் செய்கின்றன.
டி.வி.பார்க்கும் குரங்குகள்
டோக்கியோ, ஜூன். 17-
மனிதனை போலவே குரங்குகளும் ஆர்வத்துடன் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்று நடத்தினார்கள்.
அதில் குரங்குகளை டி.வி. முன்பு உட்கார வைத்து அவை டி.வி. நிகழ்ச்சிகளை எப்படி ரசிக்கின்றன? என்று ஆய்வு செய்தனர்.
குரங்குகள் பெரும்பாலும் சாகச நிகழ்ச்சி போன்ற வற்றை அதிக ஆர்வத்துடன் பார்த்தன. மற்ற விலங்குகளின் சாகச நிகழ்ச்சிகள்,
சர்க்கஸ் நிகழ்ச்சிகள் போன்ற வற்றை ஒளிபரப்பிய போது அவற்றை மிகவும் ரசித்து பார்த்தன.
நன்றி - மாலை மலர்.
கணிதத்தில் அசத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்
சென்னை, தரமணியில் நடந்த கணிதமேதை பி.கே.ஸ்ரீனிவாசன் ஐந்தாம் ஆண்டு நினைவாஞ்சலியில் விபுவிக்னேஷ் கணிதப் போட்டி நிகழ்ச்சி அரங்கேறியது. இதில், இரட்டை இலக்க எண்கள் எதைக் கூறினாலும், நொடியில் அதை பெருக்கி அதற்கான விடை கூறி, அரங்கத்தினர் பாராட்டுகளை பெற்றான்.
விபுவிக்னேஷின் கணித ஆர்வம் குறித்து அவனின் பெற்றோர் கூறியதாவது: விக்னேஷ், நான்காம் வகுப்பு கோடை விடுமுறையின்போது, உறைவிடப்பள்ளியில் இருந்து வீடு திரும்பினான். அப்போது, 500ம் வாய்ப்பாடு வரை கூறி எங்களை ஆச்சரியப்படவைத்தான். அப்போது தான் அவனுக்கு கணிதத்தின் மீது விருப்பம் உள்ளது தெரிந்தது.
அதன் பிறகு கணிதம் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி கொடுத்தோம். தற்போது, இரட்டை இலக்க எண்ணகள் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ கொடுத்தாலும் அதை பெருக்கி நொடியில் விடை கொடுக்கிறான். அவனது விருப்பப்படி கணிதமேதை பி.கே.எஸ்., நினைவாஞ்சலி நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். கணிதத்தில் அவன் சிறந்து விளங்க நாங்கள் பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விக்னேஷ் கூறுகையில், "எனக்கு சிறு வயது முதலே கணிதம் என்றால் விருப்பம். தற்போது, இரட்டை இலக்க எண்களை பெருக்கி கூறுவேன். அடுத்து, மூன்று இலக்க எண்கணை பெருக்கி கூறுவதற்காக கற்று வருகிறேன். கணிதமேதை ராமானுஜர், பி.கே.ஸ்ரீனிவாசன் போல நானும் சிறந்து விளங்கவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளேன்' என்றான்.
Thanks To.........Dinamalar