Thursday, March 31, 2011
மின்சார மனிதன்
Wednesday, March 30, 2011
( YouTube) யூ டியூபின் முதலாவது வீடியோ
இணையத்தில் வீடியோ என்றால் நினைவில் வருவது யூ டியூப் ( YouTube) வீடியோ தளமாகும். பல்லாயிரக்கணக்கான, பல்துறை சார்ந்த வீடியோக்களை தன்னகத்தே வைத்துள்ளதுடன், விரும்பிய வீடியோக்களை பதிவிறக்கி கொள்ளவும் முடியுமான உலகின் மிகவும் பிரபலமான வீடியோ தளமான யூ டியூப் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், யூ டியூப் தளத்தில் முதன் முதலாக ஏப்ரல் 23, 2005ம் திகதி அன்று ஞாயிற்றுக் கிழமை பி.ப 8:27 மணிக்கு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.
“Me at the zoo.” என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றப்பட்ட 19 செக்கன்கள் ஓடக்கூடிய, இந்த வீடியோ காட்சியில் யூ டியூப் வீடியோ தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான Jawed Karim தோன்றுவது குறிப்பிடத்தக்கதுடன், இவ்வீடியோ Yakov Lapitsky என்பவரால் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வீடியோ காட்சியை இதுவரை 4,590,545 பேர் பார்வயிட்டுள்ளதுடன், 26,935 பேர் தங்களது விருப்பத் தெரிவினையும் தெரிவித்துள்ளனர்.
இதோ யூ டியூபின் முதல் வீடியோ;

Monday, March 28, 2011
உலகின் மிகச் சிறிய தாய்.
அமெரிக்காவின் Kentucky, Dry Ridge என்னுமிடத்தைச் சேர்ந்த 37 வயதான 2 அடி 4 அங்குலம் உயர முடைய ஸ்டேசி ஹெரால்ட் (Stacey Herald) தான் உலகின் மிகச்சிறிய தாயாக 2009 ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
Osteogenesis Imperfecta என்ற நோயினால் பீடிக்கப்பட்ட இவரின் எலும்புகள் சிதைவடைந்ததுடன், வளர்ச்சியும் குன்றிப்போனமையால், சக்கர நாட்காலியில் தனது வாழ்வை கழித்து வருகிறார்.
2005ம் ஆண்டு 28 வயதுடைய 5 அடி 9 அங்குலமுடைய வில் ஹெரால்ட் (Will Herald) என்பவரை திருமணம் செய்த இவருக்கு Kateri, Makaya, Malachi என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு முன்னர் உலகின் மிகச்சிறிய தாய் என்ற பெருமையுடன் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் வாஷிங்டனைச் சேர்ந்த 2 அடி 9 அங்குலம் உயரமுடைய Cristianne Ray இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to:
Posts (Atom)