Tuesday, June 15, 2010

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள்-1


நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி " Google Search Engine ".

இதில் பொதுவாக இணையதளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம்,ஆனால் கூகிள் இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம்.


1.நமக்கு Wipro நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய
wipro
என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.


2.இந்தியாவில், இலங்கையில் அல்லது பிரான்ஸ்சில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள
weather chennai india அல்லது weather Colombo அல்லது weather Paris
என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும். அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.


3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள
time London
என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும். அந்த இடத்தின் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.


4.ஒரு குறிபிட்ட அணியின் Score மற்றும் அட்டவனையை தெரிந்துகொள்ள
kolkata night riders
என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


5.Google-ல் உள்ள In-Built Calculator மூலம் நாம் விரும்பும் Equation-க்கு விடையை மிக எளிமையாக அறிந்திட முடியும்.

சான்றுக்கு 5*9+(sq rt 10)^3 என்பதின் Answer-ஐ அறிய .
5*9+(sq rt 10)^3
என்று தட்டச்சு செய்து Enter கூடுத்தால் போதும்.Answer வந்துவிடும் .
நன்றி,சாந்தன்

இன்னும் சில கூகிள் தொடர்பான குறிப்புகள் அடுத்த பதிவில்........

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.