மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.
கடைசியாக ஒரு முடிவெடுத்து 4 பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை கயிற்றால் கட்டி வைத்து, ஆடைகளைப் பலவந்தமாகக் களைந்து பொதுமக்கள் முன்னிலையில் குளிப்பாட்டினர். 10 ஆண்டு கால அழுக்கு ஆயிற்றே? சோப்பு போட்டால் போகுமா? உடல் முழுவதும் மணலைப் பூசி அழுக்கைச் சுரண்டி, தேய்த்து எடுத்தனர். குளியல் முடிய 4 மணி நேரம் ஆகியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதைப் படிக்கும்போதே நமக்கு 'உவ்..வே..' என்று குமட்டுகிறதே, அவரைக் குளிக்க வைத்த புண்ணியவான்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
இச்சம்பவத்துக்குப் பின் 'புனிதப்பட்ட' அந்த நபருக்கு தினமும் ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என்ற 'ஞானோதயம்' வந்துள்ளதாம்.
தனிமனிதராக இத்தனை காலம் வாழ்ந்துவிட்ட அவர், இப்போது தனக்கு ஒரு துணை கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளாராம்.
Thanks To.........Veerakesary

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.