கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி
ஒரு பக்கம் பேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிறது .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது. இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. இவ்வளவு ஏன் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடு காரணமாக் இமெயிலை பயன்படுத்துவதே குறைந்து வருவதாக கூறப்படுகிறது.தேடல் முதல்வன் கூகுலுக்கு இதைவிட கவலை தரக்கூடியது வேறில்லை. பேஸ்புக் மற்றும் டிவிட்டர் சவாலை சமாளிக்கும் வகையில் கூகுல் தனது ஜிமெயில் சேவை வாடிக்கையாளர்களுக்கான சமுக வலைப்புன்னல் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுல் பஸ் என்னும் இந்த சேவையின் மூலம் ஜிமெயில் பய்னாளிகள் புகைப்படம் செய்தி மற்றும் இணைப்புகளை மற்றவர்களோடு சுலபமாக் பகிர்ந்து கொள்ளலாம்.அதவது ஜிமெயிலை விடவெளியேறாமலேயே பேஸ்புக் ,டிவிட்டர் தரும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்த சேவைக்கான அழைப்பு அனுப்ப பட்டுள்ளது.அடுத்த கட்டமாக அனைவருக்கும் விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பக்கம் அழகாகவே உள்ளது. ஐபோனுக்கான தனி செயலியும் அறிமுகமாகியுள்ளது.இந்த சேவை மூலம் கூகுல் இண்டெர்நெட் உலகில் தனது முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளது.
Thanks To....... Kumarinadu
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.