Thursday, June 24, 2010

உலகின் மிகப் பெரிய சூரிய கல படகு

உலகிப் மிகப் பெரிய சூரியகல படகு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகு 30 மீற்றர் நீளமும் 15 மீற்றர் அகலமும் கொண்டது எனவும் எதிர்வரும் 2011ம் ஆண்டு குறித்த படகு உலகை வலம் வர உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 ஜெர்மனியின் கெயிலில் குறித்த படகு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 மீள் சுழற்சி சக்தி வளப்பயன்பாடு தொடர்பில் சுவிட்சர்லாந்து காட்டி வரும் அக்கறை இந்த படகு அறிமுகம் மூலம் புலனாவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் 300000 சுவிஸ் பிராங்குகளை உதவியாக வழங்கியுள்ளது.
 கடந்த 2004ம் ஆண்டு முதல் படகு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Thanks To.....www.coolswiss.com

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.