Sunday, June 6, 2010
உலகின் மிக உயரமான கட்டடம்
[ 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன. ]
உலகிலேயே எந்தவொரு கட்டிடமும் இல்லாத அளவுக்கு உயரமான கட்டிடமான, 'புர்ஜ் துபாய்' ஜனவரி 4 ல் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படுவது தைவானில் உள்ள 'தைப்பே 101'. தைப்பே நகரின் பொருளாதார மையக் கழகத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் 101 மாடிகள் உள்ளன. இதன் உயரம் ஆயிரத்து 671 அடியாகும். இதைவிட ஆயிரம் அடியாவது அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் 'புர்ஜ் துபாய்' அமைக்கப்பட்டது.
தற்போது 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டின் கிளை நிறுவனமான எம்மார் பிராப்பர்டீஸ் தான் இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டிடத்தில் 57 லிப்டுகள் உள்ளன. இவற்றில் சில, விநாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த கட்டிடத்தில் வீடுகள். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள். விற்பனை மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை அமைந்துள்ளன.
மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குறைந்துகொண்டே செல்லும் என்பது மற்றொரு சிறப்பு. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடுகையில் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும்.
மேலும், இதன் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன.
ஒருநாளைக்கு இந்த கட்டிடத்திற்கு தேவைப்படும் 'ஏசி' வசதி, 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருக்குவதற்கு சமம் எனக் கூறப்படுகிறது.
இதனை கட்டிமுடிக்க 800 கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் துவக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 4 அன்று இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடை பெற்றது.
நன்றி,நிடூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.