Thursday, June 17, 2010

உலக கால்பந்து போட்டியை பார்க்க சோமாலிய மக்களுக்கு தடை

தற்போது தென்ஆப்பிரிக் காவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை உலகம் முழுவதும் டி.வி. மூலம் மக்கள் கண்டு களிக்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை டி.வி.யில் யாரும் பார்க்க கூடாது என தீவிரவாதிகள் தடைவிதித்துள்ளனர்.

இருந்தும் சில இடங்களில் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் டி.வி.யில் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டிற்குள் புகுந்த தீவிரவாதிகள் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த 2 பேரை சுட்டுக் கொன்றனர்.

இதை தொடர்ந்து சோமாலியாவில் பதட்டமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே மொகாடிசு உள்ளிட்ட நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் பயந்தபடியே மறைமுகமாக பலர் போட்டியை கண்டு ரசிக்கின்றனர்.

வீடியோ கேம்ஸ் மற்றும் விளையாட்டு போட்டியை டி.வி.யில் பார்ப்பது, சினிமா பார்ப்பது போன்றவை தங்களின் மதத்துக்கு எதிரானது என்று கூறி கால்பந்து போட்டியை பார்க்க தடை விதித்துள்ளதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி,www.lankasrisports.com

2 comments:

  1. லூசுப் பசங்க!

    ReplyDelete
  2. ஆமாங்க,சரியாய் சொன்னீங்க.நன்றி.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.