Saturday, June 5, 2010

தனியார் ராக்கெட்

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வுத்துறை விண்வெளிக்கு ராக்கெட்களையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பி வரும் நிலையில் முதன் முறையாக தனியாருக்கு சொந்தமான ஒரு ராக்கெட் அமெரிக்காவிலிருந்து நேற்று விண்ணில் சீறிப் பாய்ந்தது.

நாசாவுக்காக விண்ணிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த ராக்கெட் பரிசோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

பேபால் நிறுவனத்தின் உரிமையாளர் இலான் மஸ்க்-ற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனம் முதன்முறையாக ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் சில பிரச்சனைகள் காரணமாக அது கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த ராக்கெட் அமெரிக்காவில் உள்ள கேப் கனவரெல் விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நபர்களையும் சரக்குகளையும் அனுப்புவதற்கு தனியாரை ஈடுபடுத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளார். அவரது இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி,நிகழ்வுகள்

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.