1962-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே போர் நடந்தது. இந்த போரின் போது அருணாசல பிரதேசத்தில் டோக்ரா ரெஜிமெண்ட் என்ற படைப் பிரிவில் சேர்ந்து போரிட்ட வீரர்கரம் சந்த் கடோச். இவர் இந்த போரில் வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் அப்போது கிடைக்க வில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் பனி மூடிய சிகரத்தில் ஒரு ராணுவ வீரர் உடல் கெட்டுப் போகாமல் கிடந்தது. | ||
சீருடை அணிந்த நிலையில் இருந்தார். உடனே உடலை மீட்டு கொண்டு வந்தனர். சீருடையில் இருந்த அடையாள பேட்ஜை வைத்து அவர்யார் என்று அடையாளம் காணப்பட்டது. இவரது சொந்த ஊர் இமாசலபிரதேச மாநிலம் பாலம் பூர் ஆகும். கடோச் 1959-ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19. அவர் பணியில் சேர்ந்த 3 வருடத்தில் இந்தியா- சீனா இடையே போர் ஏற்பட்டது. அருணாசலபிரதேசத்தில் 4-வது டோக்ரா, ரெஜி மண்ட்டில் சேர்ந்து சீனாவை எதிர்த்து போரிட்டார்.இதில் அவர் 22 வயதில் வீரமரணம் அடைந்தார். 48 ஆண்டுகள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. சொந்த ஊரான பாலம்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன. பனி மூடிய சிகரத்தில் பனிக்கட்டிகளுக்கு இடையே உடல் கிடந்ததால் கெட்டுப் போகாமல் இருந்திருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு ராணுவ வீரர் போரில் இறந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய உடல் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இது பற்றி கடோச்சின் உறவினர்கள் கூறும் போது, எங்கள் குடும்பத்தில் ஒருவராக கடோச் இருந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்றனர். |
Saturday, July 17, 2010
48 ஆண்டுகளுக்குப்பின் உடல் மீட்பு.
இந்திய சீனப்போரில் உயிரிழந்தவரின் உடல் 48 ஆண்டுகளுக்குப்பின்னர் மீட்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.