Sunday, July 11, 2010

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர்.

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் தென் கொரியாவில் கைது.
 தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை ஒன்றிருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை.
தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்குச் சென்று ஒன் லைனில் விளையாடுவார்கள். அவ்வாறு விளையாடும் போது அவர்கள் தங்களையே மறந்து விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளைக் கூட மறந்து விடுவதும் உண்டு.
தங்களையே மறந்து விளையாடும் இவர்கள் பெற்ற குழந்தையை மட்டும் நினைவு வைத்திருப்பார்களா? அதனையும் மறந்து விட்டனர்.
குழந்தைக்குப் பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். சம்பவத்தன்று ஒன்லைனில் ஆடிய விளையாட்டில் தங்களையே மறந்து விட்டனர்.
இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்து போனது. இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது.
கவிபோன் நகர பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால்அது இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்தத் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
Thanks To...Virakesari.

2 comments:

  1. என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
    உலகமே தென்னாப்பிர்க்காவை பார்த்துக்கொண்டிருக்கிறது.
    உங்களி் இத்தகவலை பார்த்துக்கொண்டிக்கும்போதே இன்னொரரு பதிவர், இதே தென்னாப்பிரிக்காவில், ஒருவர் டிவீட்டரில் தகவல் தந்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாரரென்ற தகவலையும் தந்துள்ளார்.
    நாட்கள் போகபோக இதுபோன்ற சம்பவங்களளெல்லாம் வெறும் தகவல்களாக மாறுவதற்கான வாய்ப்புகளள் உள்ளது.

    ReplyDelete
  2. இரா.முருகப்பன் அவர்களுக்கு,
    உண்மைதான். இச்சம்பவம் தென்னாபிரிக்கா அல்ல சகோதரரே.தென் கொரியா.தற்கொலை சம்பவமும் இதே நாட்டில் தான் நடந்துள்ளது.வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள். அது சம்பந்தமான எனது பதிவு இதோ.....http://abuanu.blogspot.com/2010/07/blog-post.html

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.