Tuesday, July 13, 2010

2010 கோல்டன் ஷு

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கால்பந்து வீரராக உருகுவேயின் டீகோ ஃபோர்லானும், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மகுடத்திற்கு ஜெர்மனி வீரர் முல்லரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் போட்டியி்ல் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.
உருகுவே - ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால், மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.
இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார். மற்றவர்கள் தலா ஒருமுறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன் ஷூ விருது முல்லருக்குக் கிடைத்தது.
இது தவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது
2006-ம் ஆண்டு போட்டியில் ஜெர்மனியின் குளோஸுக்கு கோல்டன் ஷு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Thanks To....Lankasri

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.