இலங்கை அணியின் கிரிக்கெட் சாதனை வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். |
கிரிக்கெட் விளையாட்டின் 132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் முரளிதரன். இவர் இந்தியாவுக்கு எதிராக ஜூலை 18ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் முழுவதுமாக ஓய்வு பெறப்போவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது. முத்தையா முரளிதரன் ஏப்ரல் 17, 1972, கண்டியில் பிறந்தார். பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 ல் தமிழ்நாடு சென்னையில் மலர் மருத்துவமனை அதிபர் மகள் மதிமலர் ராமானுதியை திருமணம் செய்துகொண்டார். Thanks To...Tamilwin |
Wednesday, July 7, 2010
கிரிக்கெட் சாதனை வீரர் முரளிதரன் ஓய்வு பெறுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.