Tuesday, July 27, 2010

எவரெஸ்ட் செல்லும் ஹிலாரி அஸ்தி



எவரெஸ்ட் சிகரத்தை 50 வருடங்களுக்கு முன்னர் முதலில் எட்டிய சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களின் அஸ்தி அந்த சிகரத்தில் கொண்டு சென்று தூவப்படவுள்ளது. ட்மண்ட் ஹிலாரி 2008 இல் காலமானார் ந்த அஸ்தியை நேபாளத்தின் முக்கிய மலையேறியான அபா ஷெர்பா அவர்கள் செவ்வாய்க்கிழமை காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.
அபா ஷெர்பாவைப் பொறுத்தவரை இந்த சிகரத்துக்கான அவரது 20 வது மலையேற்றம் இதுவாகும். 848 மீட்டர்கள் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்துக்கு இதுவரை 19 தடவைகள் மலையேறிச் சென்றிருக்கின்ற அபா ஷெர்பாதான் உலகிலேயே அச்சிகரத்துக்கு அதிக தடவை ஏறியவராவார்.
தனது எவெரெஸ்டுக்கான 20 வதாவது மலையேற்றத்தை நியூசிலாந்து நாட்டின் மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த பயன்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம்.
எட்மண்ட் ஹிலாரி அவர்கள் 1953 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே ஷெர்பாவுடன் எவரெஸ்ட்டுக்கு ஏறினார்.
2008 இல் எட்மண்ட் ஹிலாரி அவர்கள் காலமானதை அடுத்து அவரது அஸ்தியில் ஒருபகுதி ஒக்லாண்ட் துறைமுகத்தில் கரைக்கப்பட்டது. மிகுதி எவரெஸ்ட்டில் தூவப்படுவதற்காக ஒரு மடாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்த சாம்பலை அங்கு எடுத்துச் சென்று தூவுவதற்கு திட்டமிட்டுள்ள அபா ஷெர்பா, அங்கு ஒரு சிறிய புத்தர் சிலையையும் நிர்மாணிக்க விரும்புகிறார்.
கிலாரி அவர்கள் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் எவரெஸ்ட் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு பள்ளிக்கூடங்களையும், மருத்துவ மனைகளையும் திறந்து தந்ததற்காக அவருக்கு தனது நன்றியை தெரிவிக்க தான் விரும்புவதாக அபா ஷெர்பா கூறுகிறார்.
தனது இந்தப் பயணம், எவரெஸ்ட்டில் முன்னர் சென்ற மலையேறிகள் விட்டு வந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதையும் முக்கியத்துவப்படுத்த உதவ வேண்டும் என்பது அபா ஷெர்பாவின் நோக்கம்.
ஹிமாலயத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதன் காரணமாக அங்கு பழைய மலையேறிகள் விட்டுவிட்டு வந்து, உறைந்துபோய்க்கிடந்த ஒக்சிசன் சிலிண்டர்கள் மற்றும் உணவுப் பொதிகள் ஆகியவை இப்போது கீழே வரத்தொடங்கியுள்ளன.
மலையேறிகளுக்கான வழிகாட்டிகளாக செயற்படும் ஷெர்பாக்களுக்கு, இந்தக் குப்பைகளை அகற்றுவதற்காக, ஒரு கிலோ குப்பைக்கு தலா ஒன்றைரை டாலர்கள் தற்போது வழங்கப்படுகின்றது.
இந்தத் திட்டம் தொடர்ந்து செயற்படுவதற்கு தனது இந்தப் பயணத்தின் மூலம் கிடைக்கும் நிதி பயன்படும் என்று அபா ஷெர்பா நம்புகிறார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.