
'ரெட் ஒன் கேமரா' மிக மிக துல்லியமாக லொகேஷன்களின் இயற்கை நிறத்தையும், படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. ஷூட்டிங்கின் போது காட்சிகள் அனைத்தும் பிலிம் ரோல்களுக்குப் பதில், ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு விடும். இதன் மூலம் தேவைப்படும்போது காட்சிகளைப் போட்டுப் பார்த்து கரெக்ட் செய்து கொள்ள முடியும். ஸ்டீவன் சோடன்பெர்க், பீட்டர் ஜாக்சன் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இந்த கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இந்திய திரைப்படத்திலும் இப்போது இதனை பயன்படுத்துகின்றனர்.
இந்த கேமரா மூலம் காட்சிகளை 4096 X 2096 என்ற ரெசொலூஷனில் (Resolution) பதிவு செய்ய முடியும். உலகம் முழுவதும் மொத்தமாக 5000-க்கும் குறைவான ரெட் ஒன் கேமராக்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இந்த கேமராவை வாங்குவது சாத்தியமானதல்ல. முதலில் கேமராவுக்கு ரிசர்வ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டுமாம். கேமராவின் விலை ரூ. 8 லட்சமாம். படம் எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் திருட்டு விசிடிக்காரர்கள் புரிஞ்சுகிட்டா சரி!
Thanks To.......www.z9tech.com
ரெட் ஒன் பற்றிய உங்களது பதிவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் விலை எட்டு லட்சமல்ல.. தலைவரே.. அதை பற்றி பேச, எழுத இன்னும் நிறைய இருக்கிறது..
ReplyDeleteசங்கர் அண்ணா அவர்களுக்கு,
ReplyDeleteதங்களது வாழ்த்துக்களுக்கும்,வருகைக்கும்,விலை சம்பந்தமாக தங்களது தகவலுக்கும் நன்றிகள்.வாழ்க.