Tuesday, August 3, 2010
40 லட்சம் நுளம்புகளைப் பிடித்து 3,000 டொலர் வென்ற பெண்.
தாய்வானைச் சேர்ந்த பெண் ஓருவர் அதிக எண்ணிக்கையான நுளம்புகளைப் பிடித்து 3,000 அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளார். இவர் ஒரே மாதத்தில் சுமார் 40 லட்சம் நுளம்புகளை பிடித்துள்ளார்.
தென் தாய்வான் யுன்லின் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவாங் யூ யென் என்பவரே நுளம்புப் பிடிக்கும் போட்டியொன்றில் இவ்வாறு அதிக நுளம்புகளை பிடித்துள்ளார். இப்போட்டியில் 72 போட்டியாளர்களை அவர் தோற்கடித்தார். அவர் பிடித்த நுளம்புகளின் மொத்த எடை 1..5 கிலோகிராம்களாகும்.
நுளம்புப் பிடிக்கும் கருவிகளைத் தயாரிக்கும் இம்பிகட்ஸ் இன்டர்நெஷனல் எனும் நிறுவனம் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்து.
அந்நிறுவனமானது ஹுவாங் யூ யென்னின் பெயரை கின்னஸ் உலக சாதனை நூலில் பதிவு செய்வதற்காக அனுப்பிவைத்துள்ளது.
தாய்வானில் நுளம்புகளால் பல நோய்கள் பரவி வந்தன. குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு வரை மலேரியா நோய் அங்கு பரவியிருந்தது. தற்போதும் டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்கி;றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.