Wednesday, September 8, 2010

கொலம்பியா குள்ள மனிதர் - கின்னஸ் சாதனை

பொகொடா : கொலம்பியாவை சேர்ந்த 2 அடி உயரமுள்ள குள்ள மனிதர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
கொலம்பியா நாட்டை சேர்தவர் எட்வர்டு நினோ ஹெர்னாண்டஸ் (24). இவரின் எடை 10 கிலோ, உயரம் 70.21 சென்டி மீட்டர்(27.64 Inches). உலகில் தற்போது இருப்பவர்களில் மிகவும் குள்ள மனிதர் இவர்தான். இதனால் இவரின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் கின்னஸ் சாதனை பட்டியலிடும் அமைப்பு எட்வர்டு நினோவை உலகின் குள்ள மனிதராக அறிவித்து, அவருக்கு கின்னஸ் உலக சாதனை விருதை வழங்கியுள்ளது. இதற்குமுன் சீனாவை சேர்ந்த ஹெ பின்பின்க் 1.5 இன்ச் (4 சென்டி மீட்டர்) குறைவான உயரத்துடன் குள்ள மனிதர் என்ற சாதனையை வசமாக்கினார். அண்மையில் அவர் இறந்து விடவே, உலகின் குள்ள மனிதர் என்ற பட்டத்தை நினோ தற்போது தட்டிச் சென்றார்.
நினோவின் தாயார் நவோமி ஹெர்னாண்டஸ் கூறுகையில், நினோ பிறக்கும் போது 1.5 கிலோ எடையும், 38 சென்டி மீட்டர் உயரத்துடனும் இருந்தான். 2 வயதுக்குப்பின் அவனுக்கு வளர்ச்சி இல்லாமல் போனது. இதையறித்து மருத்துவரை அனுகியபோது அவனுக்கு வளர்ச்சி ஏற்றபட வாய்ப்பில்லை என்று கைவிரித்து விட்டனர். அப்போது இருந்து அதே உயரத்தில்தான் இருக்கிறான் என்றார் அவர்.
நினோவுடன் உடன் பிறந்தவர்களில் 11 வயதுடைய ஏஞ்சல் என்பவர் 93 சென்டி மீட்டர் உயரத்துடன் உள்ளார். மற்ற 3 பேர் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சராசரி வளர்ச்சியில் உள்ளனர். நினோவுக்கு ஆடுவது என்றால் மிகவும் பிடிகுமாம். ஆடம்பர சொகுசு காரான மெர்சிடிஸ் மாடலை சொந்தமாக வாங்கி பயணம் செய்ய ஆசையாம். மேலும் அவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சில்வர் ஸ்டோலன், கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ ஆகியோரை சந்திக்க விரும்புதாகவும் தெரிவித்துள்ளார்.

Thanks Yahoo News
http://asia.news.yahoo.com/afp/20100907/tls-lifestyle-offbeat-us-nepal-record-pe-aeafa1b.html

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.