Friday, September 24, 2010

அதிக விலைக்கு சுங்கான் பெட்டி விற்பனை.

பதினேழாம் நூற்றாண்டில் இலங்கையில் யானைதந்தத்தில் தயாரிக்கப்பட்ட மிகுந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய புகைபிடிப்பதற்கான சுங்கான் பெட்டி ஒன்று பிரிட்டனில் பெரும் விலைக்கு ஏலம் போயுள்ளது.
தந்தத்திலான இந்த சிங்கள, இரு குழல் சுங்கான் பெட்டி 80,300 அமெரிக்க டாலர்களுக்கு விலைபோயுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான விலையாகும். 
கிறிஸ்டி என்னும் ஏல நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட இந்த சுங்கான் பெட்டியை வாங்கியவரின் பெயர் ரகசியமாக பேணப்படுகிறது.
50 ஆண்டுகளாக பல்வேறு வகையான சுங்கான்களை சேகரித்து வந்த Trevor Barton என்பவரது பொக்கிஷங்களில் இருந்தே இந்த சுங்கான் பெட்டி கிடைந்திருந்தது.
வித்தியாசமான புகைபிடிப்பு கருவிகள் என்கிற பட்டியலின் கீழ் இந்த சுங்கான் பெட்டி விற்பனைக்கு வந்தது.
இதுபோன்ற சுங்கான் பெட்டிகள் நான்கு மட்டுமே உலகில் இருப்பதாக கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலும், மற்ற இரண்டு நெதர்லாந்தில் இருக்கும் டி மொரியான் அருங்காட்சியகத்திலும் இருக்கின்றன. 
நன்றி.BBC

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.