சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் ஆரம்பித்த சில காலங்களிலேயே புகழின் உச்சியை அடைந்த பேஸ்புக் 'ரிமோட் லொக் அவுட்' முறையை அறிமுகப்பபடுத்துகிறது.
கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் மீ ' எனும் இணையதளத்தை துவங்க இருப்பதாக வந்த தகவல் போதாதென்று டயாஸ்போரா எனற் பெயரில் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் இணையதளமும் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது முதலிடத்தை தக்க வைக்கும் முயற்சியாக பேஸ்புக் இணையதளமும் பல புதிய அதிரடி மாற்றங்களை அறிமுகப்படு்த்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி 'ரிமோட் லொக் அவுட்' என்ற புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன்படி நமது பேஸ்புக் கணக்கு லொக் இன் ஆக இருக்கும் பட்சத்தில் நாம் எந்தவொரு கணினியில் இருந்து லொக் அவுட் செய்ய முடியும்.
இதற்கென தனியாக கணக்கு செட்டிங்கில் சில மாற்றங்கள் மேற்கொண்டுள்ளதாக பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.