Sunday, September 19, 2010

உலக சாதனை மொசைக்(Mosaic) கலைஞன்.

அல்பானிய மொசைக்(மொசைக்=பல துண்டுகளை இணைத்து சித்திர வேலைப்பாடு அமைந்த அமைப்பு) கலைஞரான Saimir Strati,(வயது 43) கடந்த 2010 செப்டெம்பர் 16 ம் திகதி மறைந்த பொப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் பெரியதொரு  உருவத்தை தைரானா(Tirana) எனுமிடத்தில் 230,000 தூரிகைகளைக்கொண்டு வடிவமைத்து உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
 அதுமட்டுமன்றி, இவர் ஆணிகள்,பல் குத்தும் குச்சிகள்,போத்தல் மூடிகள் போன்றவற்றைக்கொண்டும் இவ்வாறான மொசைக் உருவங்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் சுமார் 400 கிலோ கிராம் (880 pounds) ஆணிகளைகொண்டு  வடிவமைத்த 
லியனாடோ டாவின்சியினுடைய(Leonardo Da Vinci) உருவமானது உலகிலேயே மிகப்பெரிய மொசைக் காவியமாக  சாதனை படைத்துள்ளதும் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள்  கீழே........












No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.