Sunday, October 10, 2010

உலகின் மிகப்பெரிய கடிகாரம்

உலகின் மிகப்பெரிய கடிகாரம் சவூதி அரேபியாவிலுள்ள புனித மக்கா நகரில் நிர்மாணிக்கப்படுகிறது.1970 அடி (600M) உயரமான வானுயர்ந்த  கட்டடத்தின் உச்சியில் நான்கு பக்கங்களும் மிகப்பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் உயரமான துபாயினுடைய  Burj Khalifa கட்டடத்துக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது உயரம் கொண்டதாகவும், லண்டனிலுள்ள  Big Ben கடிகாரத்தை விட பெரியதாகவும் அமைந்துள்ளது.
உலகின் நான்கு முகங்கொண்ட மிகப்பெரிய கடிகாரமாகவும் சாதனை படைக்கிறது. ஒரு நாளைக்கு 5 தடவை ஒலிக்கும் கடிகாரத்தின் ஒலியினை சுமார் 130 அடி (40M) சுற்று வட்டத்துக்கு தெளிவாகக் கேட்க கூடியதாகவுள்ளதுடன்,இது வரை சாதனையாகவுள்ள 36M சுற்றுவட்டத்துக்கு ஒலி எழுப்பக்கூடிய இஸ்தான்புல் Cevahir Mall கடிகாரத்தையும் விஞ்சி நிற்பதும் சாதனையாகும்.
 புகழ் பெற்ற புனித மக்கா பள்ளிவாயலில் நடை பெரும் ஐவேளைத் தொழுகைகளையும், வருடா வருடம் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்து ஒன்று கூடும்  பல இலட்ச யாத்திரிகர்களை இதன் உச்சியிலிருந்து முழுவதுமாக பார்க்க முடியும்.
இந்த கடிகாரத்தின் மூன்று மாத கால பரிசோதனைப்பணிகள் கடந்த ரமழான் நோன்பு காலத்தில்  ஆரம்பமாயின.
குறிப்பிட்ட  மூன்று மாத காலத்துக்குரிய ஐந்து நேர தொழுகை நேரம்,ரமழான் கால சூரிய உதயம்,சூரிய மறைவு நேரங்கள் போன்றன நிரல் படுத்தப்பட்டுள்ளன.
நான்கு பக்க கடிகார முகப்புக்களும் 98 மில்லியன் மொசைக் கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பக்க முகப்பிலும் "அல்லாஹு அக்பர்" ("God is greatest") என அரபியில் ஆயிரக்கணக்கான வர்ண லைட்டுக்களைக் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.
கடிகாரமானது 16 மைல் (25Km) தூரத்துக்கு தெரியும் வகையில் உள்ளதால்,கடிகாரத்தில் அடியில் கண்காணிப்பு தளமும் நிறுவப்பட்டுள்ளது.
தங்கத்திலான 73 அடி (23M) விட்டமுடைய பிறை வடிவமானது கடிகாரத்திலிருந்து 200 அடி (61M) உயரமான தூண் ஒன்றில் கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து 820 அடி (251M) அமைக்கப்பட்டுள்ளது.இந்த பிறை வடிவத்திலிருந்து விண்ணை நோக்கி 15 ஒளிக்கீற்றுகள் வீசுகின்றன.
இந்த உலக சாதனைக் கடிகாரத்தை ஜேர்மன்,சுவிஸ் வல்லுனர்கள் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடிவமைத்துள்ளனர். 
இக்கட்டடத்தின் நிர்மானப்பணிகளை சவூதி அரேபியாவின் "Saudi Binladen Group"
 நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர்.




















No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.