Sunday, November 7, 2010

உலகிலேயே மிக உயரமான மனிதன்.

உலகிலேயே மிக உயரமான மனிதராக 8 அடி 1 அங்குலம் (246.5Cm) உயரமுடைய துருக்கியைச் சேர்ந்த சுல்தான் ஹுசேன் என்பவர் 2010க்கான உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 2010 செப்டம்பர் மாதம் அவர் லண்டனுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு உலக சாதனை தலைமை பதிப்பாசிரியர் Craig Glenday அவர்கள், இவருடைய உயரம் சம்பந்தமாக உறுதிப்படுத்துவதற்காக தனிப்பட்ட முறையில் துருக்கிக்கு பிரயாணம் மேற்கொண்டிருந்தார்.
ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இவர் அளக்கப்பட்ட போது, Glenday யை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விடயம்,மூன்று உலக சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர் என்பதாகும்.
உலகிலேயே மிக உயரமான மனிதர் என்பதுடன், மிகப்பெரிய கை,மற்றும் பாதங்களையும் இவரே கொண்டிருப்பதுதான். கை 27.5 Cm ம், பாதம் 36.5 Cm களுமாகும்.
இதே  தருணத்தில்,உலகிலேயே மிக உயரமானவர்களாக சீனாவைச் சேர்ந்த Bao Xi Shun (7 ft 8.95 in) மற்றும் உக்ரைனைச்சேர்ந்த Leonid Stadnyks (8 ft 5.5 in) ஆகியோர் பெயரிடப்பட்டாலும், அவர்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
Glenday மேலும் குறிப்பிடுகையில்,பத்துக்கும் மேற்பட்டோர் உலகின் மிக உயரமனவர்களாக தெரியப்பட்டாலும் ஹுசேன் தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். என்றார்.













No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.