தென் கொரியாவில் பாவித்த செருப்புக்கடை உரிமையாளர் ஒருவர் 1200 சோடிக்கும் மேற்பட்ட பெறுமதியான, புதிய புதிய வடிவமைப்புடைய செருப்புகளை மரண வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் திருடியுள்ளமை அண்மையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், திருடனும் திருட்டில் ஈடுபட்டிருக்கும் போது வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
59 வயதுடைய பார்க் (Park) என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரரராகும். கொரியர்கள் மரண வீடுகளுக்கு சென்றால் தங்கள் செருப்புக்களை கழற்றி விட்டு நுழைவது அவர்களது பரம்பரை வழக்கமாகும். இதனை சாதகமாக பயன்படுத்திகொண்ட பார்க், மரண வீடுகளுக்கு செல்வோருடன் தானும் சென்று தான் அணிந்திருக்கும் பழைய செருப்பை கழற்றி விட்டு பெறுமதியான, புதிய வடிவமைப்புடைய செருப்புக்களை அணிந்து கொண்டு வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருந்தமையும், இவரது தொழில் இரகசியமும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடி வரும் செருப்புக்களில் சிறு சிறு திருத்தங்களை தனது செருப்புகடையில் செய்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரது தொழில் இரகசியத்தை அறிந்து கொண்ட போலீசார் Sueso மாவட்டத்தில் மரண வீடொன்றுக்கு இவர் செல்லும் இவரை பின் தொடரலானார்கள். வீட்டில் நுழைந்த பார்க், தான் அணிந்திருந்த பெறுமதியற்ற செருப்பை கழற்றி விட்டு அதனருகே கழற்றப்பட்டிருந்த செருப்பினையும் மேலும் இரண்டு சோடி செருப்புக்களையும் திருடிக்கொண்டு வெளியேறும் போது இவரை தொடர்ந்து வந்த போலீசார் கையும் மெய்யுமாக பிடித்து விட்டனர்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.