இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்.!
- பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.
- ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.
- இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும்.
- முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.
- ‘நீண்ட மோதிர விரல்’ கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- ‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
- ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.
- 1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.
- பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது. காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை ஞாபகம் நினைவு மனம் தொடர்புடையது.
- பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது.
- சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.
- நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.
- ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
- உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.
- வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.