தென் கொரியாவின் துறைமுக நகரமான சம்சாக் ( Samcheok) பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி 11, 12 ம் திகதிகளில் 39 அங்குலம்( 100Cm) பனிப்பொழிவு பெய்துள்ளதாக Agence France செய்தி வெளியிட்டுள்ளது. 1911ம் ஆண்டின் பின்னர், கடந்த ஒரு நூற்றாண்டில் செய்த ஆகக்கூடிய பனிப்பொழிவாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பனிப் பொழிவினால் பாதைகள் மூடப்பட்டதன் காரணமாக, பாதைகளில் பயணத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்கள் ஆபத்தை எதிர் கொள்ள நேரிட்டதுடன், பனியின் பாரம் காரணமாக நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது உள்ளதாகவும்,தென்கொரிய அரசு அவசர மீட்பு பணிகளில் 12000 இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் பகுதிகளும் கடும் பனிப்பொழிவுக்கு உள்ளாகியுள்ளதுடன், வரலாற்றில் முதல் தடவையாக ஹன் (Han River) ஆறும் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், 1960 ம் ஆண்டின் பின்னர், இந்த ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கடும் குளிரான காலநிலை நிலவுவதும் பதிவாகியுள்ளது.

வீடியோ இணைப்பு.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.